Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

அர்ஜுனவிடம் இழப்பீடு கோர இலங்கை கிரிக்கெட் முடிவு...!

    

தேசிய கிரிக்கெட் சபையின் தற்போதைய தலைவரும் முன்னாள் கிரிக்கெட் அணித் தலைவருமான அர்ஜுன ரணதுங்கவிடம் இரண்டு பில்லியன் ரூபா இழப்பீடு கேட்பதற்கு இலங்கை கிரிக்கெட் சபையின் நிறைவேற்றுக் குழு தீர்மானித்துள்ளது.

அர்ஜுன ரணதுங்க இலங்கை கிரிக்கெட் சபை மற்றும் இலங்கை கிரிக்கெட் நிறைவேற்றுக் குழு உறுப்பினர்களின் நற்பெயருக்கு களங்கம் விளைவுக்கும் வகையில் கருத்து வெளியிட்டிருப்பதாக இலங்கை கிரிக்கெட் நிறைவேற்றுக் குழு தீர்மானித்திருப்பதாகவும் அதன்படி ரணதுங்கவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு தீர்மானித்ததாகவும் இலங்கை கிரிக்கெட் சபையின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ரணதுங்க, இலங்கை கிரிக்கெட் நிறைவேற்றுக் குழுவுக்கு எதிராக தவறான மற்றும் அவதூறு குற்றச்சாட்டுகளை சுமத்தியதாக இலங்கை கிரிக்கெட் சபை வெளியிட்ட அறிவிப்பு ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments