Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

காஷ்மீரை விட்டு பாகிஸ்தானும் சீனாவும் வெளியேற வேண்டும்...!


லண்டன் வாழ் காஷ்மீரிகள் கோரிக்கை

ஜம்மு – காஷ்மீர் பிராந்தியத்தில் இருந்து பாகிஸ்தானும் சீனாவும் வெளியேற வேண்டும் என்றும் பிரச்சினைக்கு ஒரு சமாதானத் தீர்வு எட்டப்பட வேண்டும் என்றும் லண்டன் வாழ் காஷ்மீரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த மாதம் 28ஆம் திகதி லண்டன் லீட்ஸ் மைதானத்தில் காஷ்மீரைச் சேர்ந்த மனித உரிமை செயற்பாட்டாளர்கள், சிந்தனையாளர்கள், அரசியல்வாதிகள் மற்றும் லண்டன் காஷ்மீரிகள் கலந்து கொண்ட சர்வதேச காஷ்மீர் மாநாட்டில் இவ் வேண்டுகோள் முன் வைக்கப்பட்டது.

ஜம்மு- காஷ்மீர் என்பது ஒன்றிணைந்த, ஸ்திரமான ஒரே அரசியல் அமைப்பு கொண்ட ஒரு பிரதேசம் என்பதே எமது இலட்சியம் என்றும் அப்பிராந்திய மக்களின் மனித உரிமைகள் நசுக்கப்பட முடியாதது என்றும் பணவீக்கம், அநீதி, மின்சாரவசதி தரப்படாமை, அதிக வரிவிதிப்பு என்பனவற்றின் ஊடாகவும் துப்பாக்கி முனையிலும் அவர்களை வாய்மூடி வைத்திருக்க முடியாது என்றும் இக்கூட்டத்தில் உரையாற்றியோர் தெரிவித்தனர்.

ஜம்மு – காஷ்மீர், ஆக்கிரமிப்பு, வன்முறை, பயங்கரவாதம் என்பனவற்றை 1947 முதல் சந்தித்து வந்துள்ளது. இப் பிராந்தியம் பிரித்து வைக்கப்பட்டிருப்பதற்கு ஒரு முடிவு காணப்பட வேண்டும்.

Post a Comment

0 Comments