Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

நீர்க் கட்டணங்களை அதிகரிக்கவும் அமைச்சர்கள் முடிவு...!


மலநீர் கழிவகற்றல் முகாமைத்துவ கட்டணங்களும் அதிகரிக்கப்படும்

செலவுகளை ஈடுசெய்யும் வகையில் நீர்க் கட்டணத்தை திருத்த அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

நேற்றைய அமைச்சரவையில் இவ்வனமதி வழங்கப்பட்டுள்ளது.

தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை நிதி நிலைத்தன்மையை உறுதிப்படுத்தல் மற்றும் பொதுமக்களுக்கு தொடர்ச்சியாகவும் தடையின்றியும் நீர் வழங்கலை மேற்கொள்ளும் வகையில் நீர்க் கட்டணங்களில் திருத்தம் கொண்டுவர வேண்டிய தேவை கண்டறியப்பட்டுள்ளது.

அதற்கமைய, தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையினால் ஈடுசெய்ய வேண்டிய செலவுகள் மற்றும் மூலதனக் கடன் பொறுப்புகளை ஈடு செய்வதற்கு இயலுமான வகையில், தற்போது அறவிடப்படும் நீர்க் கட்டணம் மற்றும் மலநீர் கழிவகற்றல் முகாமைத்துவ கட்டணங்களைத் திருத்தம் செய்வதற்கு நீர் வழங்கல் அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

மின் கட்டணங்கள் நாளை (10) முதல் அதிகரிக்கவுள்ள நிலையில், நீர் கட்டணத்தையும் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments