Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

அவுஸ்திரேலியாவில் புதிய ரஸ்ய தூதரகத்திற்கான கட்டுமான பணிகளை நிறுத்தியது அவுஸ்திரேலிய அரசாங்கம்...


கான்பெரவில் ரஸ்ய தூதகரத்திற்கான புதிய கட்டிடத்தை அமைக்கும் நடவடிக்கைகளை நிறுத்துமாறு அவுஸ்திரேலியா உத்தரவிட்டுள்ளதை இரு நாடுகளிற்கும் இடையில் இராஜதந்திர நெருக்கடி ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகரித்துள்ளன.

அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் இந்த நடவடிக்கைக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து ரஸ்யா ஆராய்ந்து வருகின்றது.

கான்பெராவின் புறநகர் பகுதியில் உள்ள இல் ரஸ்ய தூதரகத்திற்கான புதிய கட்டிடத்தை அமைப்பதற்காக வழங்கப்பட்ட குத்தகையை முடிவிற்கு கொண்டுவந்துள்ளதாக தேசிய தலைநகர் அதிகார சபை புதன்கிழமை அறிவித்திருந்தார்.

20 நாட்களிற்குள் அங்கிருந்து வெளியேறுமாறு அதிகாரசபை உத்தரவிட்டுள்ளது.

2008 இல் அந்த இடத்தை கொள்வனவு செய்த ரஸ்ய தூதரகம் 2011 இல் கட்டிடவேலைகளை ஆரம்பிப்பதற்கான அனுமதியை பெற்றது.

எனினும் தேசிய தலைநகர் அதிகார சபை கட்டுமான பணிகளில் முன்னேற்றம் ஏற்படவில்லைஎன தெரிவித்துள்ளதுடன் வெளிநாட்டு தூதரகங்களிற்காக ஒதுக்கப்பட்டபகுதியின் கண்ணியமும் அழகும் பாதிக்கப்படுகின்றது எனவும் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை புதிய தூதரகம் ரஸ்யாவின் வேவுபார்க்கும் நடவடிக்கைகளை விஸ்தரிக்கலாம் என்ற அச்சம் காணப்படுவதாக நியுஸ்கோர்ப்ஸ் தெரிவித்துள்ளது.

இதேவேளை ரஸ்யாவின் ஒப்பந்தக்காரர்கள் புதிய கட்டிடத்தின் கட்டுமான பணிகளை ஆராய்வதற்காக அவுஸ்திரேலியாவிற்குள் நுழைவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அவர்கள் ரஸ்யாவின் புலனாய்வு பிரிவினருடன் தொடர்புடையவர்கள் என்ற அச்சம் காரணமாகவே அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

முன்னொரு போதும் இல்லாத இந்த வரவேற்க முடியாத நடவடிக்கைக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை எடுக்கவுள்ள ரஸ்ய தூதரகம் தெரிவித்துள்ளது.

இந்த கட்டுமானப்பணிகள் பல வருடங்களாக பல தடைகளை இடையூறுகளைஎதிர்கொண்டுள்ளனஎன தூதரக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments