Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

நிந்தவூர் விபத்தில் காத்தான்குடியைச் சேர்ந்த தென்கிழக்குப் பல்கலை மாணவி பலி!



நிந்தவூரில் இன்று (31) புதன்கிழமை காலை இடம் பெற்ற விபத்தில் காத்தான்குடியைச் சேர்ந்த தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

புதிய காத்தான்குடியைச் சேர்ந்த அலிஅக்பர் அஸ்மா (21) எனும் மாணவியே இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர் என தெரிவிக்கப்படுகிறது.

இவர் திருமணம் செய்து இன்றுடன் மூன்று மாதமும் 3 நாட்களுமான நிலையில் ஒலுவில் தென்கிழக்கு பலக்லைக்கழகத்துக்கு தனது கணவருடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது நிந்தவூரில் வைத்து ரிப்பர்; வாகனமொன்றுடன் மோதுண்டதில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது.

அவரைது கணவரும் காயமடைந்து வைத்தியாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற் கொண்டு வருகின்றனர்.

Post a Comment

0 Comments