Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

கோட்டாபய செப்டம்பரிலேயே இலங்கை வருவார்...!


முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயராஜபக்ச செப்டம்பர்மாதத்தில் இலங்கை திரும்புவார் என சர்வதேச ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இது குறித்து மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.

பொதுமக்கள் எழுச்சி காரணமாக ஜூலை மாதம் இலங்கையிலிருந்து வெளியேறிய முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயராஜபக்ச இன்னும்இரண்டு வாரங்களின் பின்னரே இலங்கை திரும்புவார் என இந்த விடயம் குறித்து நன்கறிந்த இரண்டு தரப்புகள் செவ்வாய்கிழமை ரொய்ட்டருக்கு தெரிவித்தன.

முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான பேச்சுவார்த்தைகளிலேயே அவர் எப்போது இலங்கை வருவார் என்பது தங்கியுள்ளது.

தாய்லாந்தில் அவர் தங்கியுள்ளதால் ஏற்பட்ட செலவுகளும் அவரது இலங்கை விஜயத்தை தீர்மானிக்கின்றன என விடயமறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

இலங்கை ஊடகங்கள் கோட்டாபய ராஜபக்ச புதன்கிழமை இலங்கை வருவார் என தெரிவித்துள்ளன எனினும் முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்பு மற்றும் ஏனைய விடயங்கள் தொடர்பில் அரசாங்கத்திற்கும் பொதுஜனபெரமுனவிற்கும் இடையில் இடம்பெறும் பேச்சுவார்த்தைகள் காரணமான கோட்டாபயவின் வருகை பிற்போடப்பட்டுள்ளது என விடயமறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

அவர் நிச்சயமாக வரவிரும்புகின்றார் பாதுகாப்பே முக்கிய விடயம் புலனாய்வு தரப்பினர் அவரது விஜயத்தை தாமதிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளனர் என இலங்கை அதிகாரியொருவர் தெரிவித்தார்.

அவரது பாதுகாப்பு குறித்த ஏற்பாடுகள் பூர்த்தியானால் கோட்டாபய இரண்டு வாரங்களில் அல்லது அதற்கு முன்னர் நாடு திரும்புவார் என தகவலறிந்த வட்டாரமொன்று தெரிவித்தது.

இதேவேளை தாய்லாந்தில் தங்கியிருப்பது மிகவும் செலவான விடயம் என்பதாலேயே அவர் நாட்டிற்கு வரவிரும்புகின்றார் என விடயத்தை நன்கறிந்த இன்னுமொரு தரப்பு தெரிவித்தது.

தனியார் விமானம் ஜனாதிபதிக்கான விசேட தங்குமிடம் பாதுகாப்பு என பெரும் பணம் செலவாகியுள்ளது - பலமில்லியன் ரூபாய் செலவாகியுள்ளது செலவு கட்டுக்கடங்காமல் போகின்றது என ஒரு தரப்பு தெரிவித்தது.

செலவவுகளை அவரது ஆதரவாளர்களே ஏற்கவேண்டியுள்ளது என ஜனாதிபதியின் குடும்பத்திற்கு தரப்பொன்று தெரிவித்தது.

எனினும் முன்னாள் ஜனாதிபதி விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த அனைவரும் தங்கள் பெயர்கள் வெளியாவதை விரும்பவில்லை.

ராஜபக்சவின் வருகை குறித்த ஏற்பாடுகள் குறித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வதற்காக தங்கள் கட்சி ஜனாதிபதியை சந்தித்துள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவின் பொது செயலாளர் சாகரகாரியவசம் தெரிவித்துள்ளார்.

அவர் விரைவில் இலங்கை வருவதற்கு ஏற்ற விதத்தில் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு நாங்கள் வேண்டுகோள் விடுத்துள்ளோம் என அவர் தெரிவித்துள்ளார்.

நன்றி...
வீரகேசரி

எங்களது குரூப்பில் இணைந்து உலகில் இடம் பெறுகின்ற முக்கியச் செய்திகளை நம்பகத்தன்மையுடன் அறிந்து கொள்ளுங்கள்...

Post a Comment

0 Comments