Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

பொருளாதரப் பிரச்சினையைத் தீர்க்க இடைக்கால வரவு செலவுத் திட்டத்தில் அதிக கவனம்...!


சுற்றுலாத்துறை, நிர்மாணத்துறை உள்ளிட்ட பல துறைகளயும் மேம்படுத்த நடவடிக்கை

தற்போது இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ள செயற்றிட்டங்கள் விரைவில் மீள ஆரம்பம்

நாடு முகம் கொடுத்துள்ள பொருளாதாரப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக முன்மொழியப்பட்டுள்ள இடைக்கால வரவு செலவுத் திட்டத்தில் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது. நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் திட்டங்களை தயார்படுத்தும் போது அது பற்றி மேலதிக கவனத்தைச் செலுத்துமாறு விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

இதன்படி நாட்டின் பொருளாதாரம் சீரடைந்தவுடன் தற்போது இடைநிறுத்தி வைக்கப்பட்ட செயற்திட்டங்கள் அனைத்தையும் உடனடியாக ஆரம்பிக்க முடியும் என்றும் தான் நம்புவதாக அமைச்சர் தெரிவித்தார்.

இடைக்கால வரவு செலவுத் திட்டம் ஒன்று தயாரிப்பது பற்றி அமைச்சின் அதிகாரிகளுடன் பத்தரமுல்லை, செத்சிறிபாயவில் உள்ள அமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற (24) கலந்துரையாடலின் போது அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.



அங்கு அமைச்சர் கருருத்துத் தெரவிக்கும் போது:

அடுத்த வருடத்தில் சுற்றுலாத் துறையினை வளர்ப்பதற்காக புதிய வரவு செலவுத் திட்டத்தின் கீழ் முன்னுரிமை வழங்க அரசாங்கம் எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார். வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளை தயார்படுத்தும் போது அது பற்றிய கவனம் செலுத்தி மாவட்ட மட்டத்தில் அதற்குரிய திட்டங்களைத் தயாரிக்க வேண்டும். 'மிஹிந்து நிவஹன' போன்ற நாட்டுக்கு பிரயோசமான வேலைத் திட்டங்களை இடைநிறுத்தாமல் தொடர்ந்தும் செயற்படுத்தப்படுமானால் சிறப்பாக இருக்கும். எனினும் தற்போது நாட்டின் பொருளாதார நிலை சீராக இல்லாத நிலையில் பெரும்பாலான செயற்றிட்டங்களை எமக்கு இடைநிறுத்த வேண்டியேற்பட்டது. ஆனால் நாட்டின் பொருளாதார நிலைமை சீரடைந்தவுடன் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அனைத்து வேலைத் திட்டங்களும் விரைவாக மீள ஆரம்பிக்கப்படும்.

அதனால் அமைச்சின் அதிகாரிகள் அனைவரும் இணைந்து நிறுவன ரீதியாக வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளைப் பெற்றுக் கொண்டு பொது முன்மொழிவொன்றை தயாரிக்க வேண்டும். நாட்டுக்குச் சாதகமான நேரடி வெளிநாட்டு முதலீடுகளை ஊக்குவிப்பதற்கும் சுற்றுலாத்துறை மற்றும் சிறிய மட்டத்திலான வர்த்தகங்களை மீண்டும் கட்டியெழுப்புவதற்காக, நிறுவனங்களை ஒன்றிணத்து அரச வர்த்தகங்களை மறுசீரமைத்தல், நாட்டில் உணவுப் பாதுகாப்பை ஏற்படுத்துதல் போன்ற துறைகள் தொடர்பில் அதிக கவனத்தைச் செலுத்தவேண்டுமென அமைச்சர் தெரிவித்தார்.

இக்கலந்துரையாடலில், நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் செயலாளர் பிரதீப் ரத்னாயக்க, மேலதிக செயலாளர் (வீடமைப்பு மற்றும் கட்டுமானம்) கீர்த்தி ரஞ்சித் அபேசிறிவர்தன, மேலதிக செயலாளர் (கரையோர பாதுகாப்பு மற்றும் தாழ்நிலங்கள்) அனில் விஜேசிறி, மேலதிக செயலாளர் (தோட்டப்புற வீடமைப்பு), டி.டி. மாத்தரஆரச்சி மற்றும் அமைச்சின் பிரதான நிதி உத்தியோகத்தர்கள், பணிப்பாளர்கள், கணக்காளர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.

எங்களது குரூப்பில் இணைந்து உலகில் இடம் பெறுகின்ற முக்கியச் செய்திகளை நம்பகத்தன்மையுடன் அறிந்து கொள்ளுங்கள்...

Post a Comment

0 Comments