Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

காத்தான்குடி மத்திய கல்லூரியின் மாணவ தலைவர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வு..






காத்தான்குடி மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை) இன் மாணவத் தலைவர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வு வியாழக்கிழமை (04) கல்லூரியின் அதிபர் எம்.சீ.எம்.ஏ.சத்தார் தலைமையில் கல்லூரியின் ஒன்றுகூடல் மண்டபத்தில் இடம்பெற்றது.




இந்நிகழ்வில் மட்டக்களப்பு மத்தி வலைய கல்விப்பணிப்பாளர் கலாநிதி எஸ்.எம்.எம்.எஸ்.உமர் மெளலானா பிரதம அதிதியாக கலந்துகொண்டதுடன் மட்டக்களப்பு தேசிய கல்வியற் கல்லூரி பீடாதிபதி எம்.ஐ.எம்.நவாஸ், நகர சபை தவிசாளர் எஸ் எச்.அஸ்பர், தள வைத்தியசாலையின் வைத்தியட்சகர் யூ.எல். ஜாபிர் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் கெளரவ அதிதியாக கலந்து கொண்டு மாணவத் தலைவர்களுக்கான சின்னங்களை அணிவித்தனர்.



கல்லூரி மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையுடன் அதிகள் மற்றும் மாணவத் தலைவர்கள் அழைத்து வரப்பட்டதுடன் கெளரவிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.




(பஹத் ஜூனைட் - ஊடகவியலாளர்)

Post a Comment

0 Comments