Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

அவுஸ்திரேலியாவில் நாளை முதல் குரங்கம்மை தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் ஆரம்பம்...!


அவுஸ்திரேலியாவில் நாளை முதல் குரங்கம்மை தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் ஆரம்பம்- ஓரினச்சேர்க்கையாளர்களிற்கு முன்னுரிமை

விக்டோரியாவில் குரங்கம்மை ஆபத்தை அதிகளவு எதிர்கொள்பவர்களிற்கு வழங்குவதற்கான தடுப்பூசிகள் தடுப்புமருந்துகள் வந்துசேர்ந்துள்ள என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இன்று விக்டோரியாவிற்கு 350 டோஸ் தடுப்பூசிகள் வந்துசேர்ந்துள்ளன குரங்கம்மை நோய் ஆபத்தை அதிகளவு எதிர்கொள்பவர்களிற்கு நாளை முதல் தடுப்பூசிவழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

புதன்கிழமை வாரமொன்றிற்கு ஆயிரம் பேருக்கு தடுப்பூசியை வழங்குவதற்கு அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர்.

ஓரினச்சேர்க்கையாளர்கள் பாதிக்கப்பட்டவர்களுடன் நெருங்கிய தொடர்பிலிருந்தவர்கள் ஆய்வுகூட பணியாளர்களிற்கே முன்னுரிமை எனவும் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

ஆபத்தை எதிர்கொள்பவர்கள் தகவலிற்காக பொதுதகவல் மையங்களை நாடுகின்றனர் ஆரம்பத்தில் மக்கள் தாங்களாகவே முன்வந்து தடுப்பூசியை செலுத்திக்கொள்வார்கள் என கருதுவதாகவும் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

குரங்கம்மை நோயாளிகளுடன் நெருக்கமான தொடர்பிலிருந்தவர்கள் குரங்கம்மை நோய் மாதிரிகளை ஆராய்ந்த ஆய்வுகூட பணியாளர்கள் ஓரினச்சேர்க்கையாளர்களுடன் இருபாலின ஆர்வம் உள்ளவர்களுடன் உறவில் ஈடுபட்ட பாலியல் தொழிலாளர்கள தடுப்பூசியை செலுத்திக்கொள்ள முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments