Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

இன­வாத 'ஜோக்' : கலைக்கப்பட்டது அமெ­ரிக்­காவின் பொலிஸ் நிலை­ய­ம்...!


அமெ­ரிக்­காவில் பொலிஸ் அதி­காரி ஒருவர், இன­வா­த­மான நகைச்­சு­வை­களை சக அதி­கா­ரி­யுடன் பகிர்ந்து கொண்­டதால், நக­ர­மொன்றின் பொலிஸ் நிலை­யத்­தையே அந்­ந­கர நிர்­வா­கிகள் கலைத்­துள்­ளனர்.


அல­பாமா மாநி­லத்தின் வின்சென்ட் நகர பொலிஸ் நிலை­யமே இவ்­வாறு கலைக்­கப்­பட்­டுள்­ளது.


வின்செட் நகர பொலிஸ் பிரதித் தலைவர் ஜோன் கொஸ், சக அதி­காரி ஒரு­வ­ருக்கு அனுப்­பிய குறுஞ்­செய்­தியில், 'கர்ப்­பி­ணி­யான அடி­மையை வாங்­கு­வதை நீங்கள் எப்­படி குறிப்­பி­டு­வீர்கள்' எனக் கேட்­டி­ருந்தார்.

மற்­றைய உத்­தி­யோ­கத்தர் 'எப்­படி' எனக் கேட்­ட­போது.

'ஒன்று வாங்­கினால் ஒன்று இல­வசம்' என்­ப­தாக முதல் உத்­தி­யோ­கத்தர் பதி­ல­ளித்தார்.

இக்­கு­றுஞ்­செய்தி பரி­மாற்றம் ஊட­கங்­களில் வெளி­யாகி சர்ச்­சையை ஏற்­ப­டுத்­தி­யது.

ஆபி­ரிக்­கா­வி­லி­ருந்து கொண்­டு­வ­ரப்­பட்ட கறுப்­பி­னத்­தர்கள் அமெ­ரிக்­காவில் அடி­மை­க­ளாகப் பயன்­ப­டுத்­தப்­பட்டு வந்­தனர். கடந்த நூற்­றாண்டின் மத்­திய பகு­தி­யிலும் அமெ­ரிக்­காவில் கறுப்­பி­னத்­த­வர்­க­ளுக்கு சம உரிமை மறுக்­கப்­பட்­டி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது.

இந்­நி­லையில், அமெ­ரிக்­காவில் 1930கள் மற்றும் 40களில் இருந்­ததைப் போல், அதி­கா­ரியின் நடத்தை உள்­ளது என வின்சென்ட் மக்கள் விசனம் தெரி­வித்­தனர்.

இவர்­களின் நட­வ­டிக்கை குறித்து நான் மிகவும் அதிர்ச்­சி­ய­டைந்­துள்ளேன். இப்­பொலிஸ் அதி­கா­ரி­களில் ஒரு­வரை நான் எப்­போதும் மிக உயர்­வாக மதித்­தி­ருந்தேன் என வின்சென்ட் நக­ரி­லேயே வளர்ந்த ஒருவர் தெரி­வித்தார்

அதை­ய­டுத்து வின்சென்ட் நகர சபை அதி­கா­ரிகள் இணைந்து, அந்­ந­கர பொலிஸ் திணைக்­க­ளத்தை முற்­றாக கலைப்­ப­தற்கு தீர்­மானம் மேற்­கொண்­டனர்.

அத்­துடன், வின்சென்ட் நகர பொலிஸ் தலைவர் ஜேம்ஸ் சிறிக்லே மற்றும் பிரதித் தலைவர் ஜோன் கொஸ் ஆகியோர் பதவி நீக்கப்பட்டுள்ளனர் எனவும் அந்நகர மேயர் ஜேம்ஸ் லெட்டிமோர் தெரிவித்துள்ளார். எஞ்சியிருந்த பொலிஸ் அதிகாரிகள் ராஜினாமா செய்தனர்.

Post a Comment

0 Comments