ஒலாவின் புதிய வாகன அறிமுகம்: ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் ஆகஸ்ட் 15 அன்று இந்தியாவின் சுதந்திர தினத்தன்று ஒரு பெரிய நிகழ்வை திட்டமிட்டுள்ளது. நிறுவனத்தின் முதல் மின்சார கார் ஆகஸ்ட் 15 ஆம் தேதி பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வரவிருக்கிறது. ஆனால், வேறு சில ஆச்சரியங்களையும் நிறுவனம் கொடுக்கலாம் என்று சூசகமாக சொல்கிறார் Ola CEO பவிஷ் அகர்வால். ட்விட்டரில் அவர் பதிவிட்ட சமீபத்திய கேள்வி ஒன்று அதை உறுதிப்படுத்துகிறது. ஓலா எலக்ட்ரிக் காரைத் தவிர, "குறைந்த விலையில்" புதிய ஓலா எஸ்1 இருக்கலாம் என்று அனுமானிக்கப்படுகிறது.
ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியீட்டு விழா குறித்த டீஸரை அகர்வால் முன்பு ட்வீட் செய்தார். டீஸர் உண்மையில் பிரத்தியேகங்களை வெளிப்படுத்தவில்லை என்றாலும், ஓலா தலைவர் "இந்த ஆகஸ்ட் 15 ஆம் தேதி ஒரு புதிய தயாரிப்பை அறிவிப்பதில் மிகவும் உற்சாகமாக இருக்கிறோம்" என்று தெரிவித்தார்.
"எங்கள் பெரிய எதிர்கால திட்டங்களைப் பற்றி மேலும் பகிர்ந்து கொள்வேன்" என்று அகர்வால் மேலும் கூறினார். இது நிறுவனத்தின் போர்ட்ஃபோலியோ விரிவாக்கம் பற்றிய பகுதியை உறுதிப்படுத்துகிறது. உதாரணமாக, ஓலா செல் தொழிற்சாலை தொடர்பான செய்தியாகவும் இருக்கலாம்.
ஆனால் ஓலாவின் எலெக்ட்ரிக் கார் தொடர்பான முன்னோட்ட காட்சிகளை வெளியிட்டுள்ளது. ஜூன் மாதம் ஓலா வாடிக்கையாளர் தினத்தில், அதன் எல்இடி டிஆர்எல்களை சிவப்பு நிறத்தில் காட்டும் காரின் வீடியோ டீசரைப் பகிர்ந்துள்ளது.
காரின் முன் மற்றும் பின்புற வடிவமைப்பும் டீசரின் ஒரு பகுதியாக இருந்தது. ஓலா லோகோ இருபுறமும் தோன்றியது. ஓலா எலக்ட்ரிக் காரைப் பற்றிய வேறு எதுவும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை. 4 கதவுகளுடன் கூடிய கூபே-ஸ்டைல் ரூஃப்லைனைக் கொண்டிருக்கலாம் என்று ஊகங்கள் இருக்கின்றன.
Ola தனது பணியாளர்களின் கணிசமான அளவில் பணிநீக்கங்கள் செய்ததும், ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்தின் பல உயர் அதிகாரிகள் கடந்த சில மாதங்களில் ராஜினாமா செய்ததும் நிறுவனத்தின் வணிகக் கண்ணோட்டம் குறித்த கேள்விகளை எழுப்பியது. ஓலாவின் போட்டியாளரான உபெருடன் வணிகத்தை இணைப்பது தொடர்பாகவும் ஓலா எலெக்ட்ரிக் நிறுவன தலைமை செயல் அதிகாரி பாவிஷ் அகர்வால் தெரிவித்திருந்தார்.
“நாங்கள் மிகவும் லாபகரமாக இயங்கிக் கொண்டிருக்கிறோம். நன்றாக வளர்ந்து வருகிறோம். வேறு சில நிறுவனங்கள் தங்கள் வணிகத்தை இந்தியாவிலிருந்து விலக்கிக் கொள்ள விரும்பினால், அது அவர்களின் விருப்பம்! நாங்கள் ஒருபோதும் இணைய மாட்டோம்” என்று அகர்வால் தனது அண்மை ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
Any guesses what we’re launching on 15th August??!!
— Bhavish Aggarwal (@bhash) August 5, 2022
0 Comments