Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

எரிபொருள் வரிசைகள் அதிகரித்தமைக்கான காரணத்தைக் கூறும் எரிபொருள் நிலைய உரிமையாளர்கள் சங்கம்!


இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் அதிகாரிகள் சிலரின் தவறான தீர்மானங்கள் காரணமாக எரிபொருட்களை பெற்றுக் கொள்வதற்கு மக்கள் மீண்டும் வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக எரிபொருட்கள் நிலைய உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் குமார ராஜபக்க்ஷ தெரிவித்தார்.

எரிபொருட்களின் கையிருப்பு இன்மையால் பொது மக்களைப் போலவே எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்களும் பாரிய அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்து வருவதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.


வைப்பகப் படம்

காலை 9.30 மணிக்கு முன்பதாக பணம் செலுத்தப்படாது விட்டால் எரிபொருட்களைப் பெற்றுக்கொள்வதற்கான அனுமதியை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் இரத்துச் செய்வதாகவும், குறித்த நேரத்துக்குள் பணம் செலுத்துவதில் சிரமம் இருப்பதால், எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருள் கிடைக்காமல் போகிறது.
.
எரிபொருட்களுக்கான பணம் செலுத்தும் முறை நியாயமற்ற வகையில் காணப்படுவதாகவும், காசோலை மூலமான ‍கட்டணங்களை செலுத்தும் முறையை மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

எங்களது குரூப்பில் இணைந்து உலகில் இடம் பெறுகின்ற முக்கியச் செய்திகளை நம்பகத்தன்மையுடன் அறிந்து கொள்ளுங்கள்...
https://chat.whatsapp.com/CdQrB2OOcuB80nQg6k4iDh

Post a Comment

0 Comments