Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

யுக்ரைன் சுதந்திர தினம் இன்று: ரஷ்யா தாக்குதல் நடத்தினால் பதிலடி மிகவும் சக்திவாய்ந்தாக இருக்கும்: ஜனாதிபதி செலென்ஸ்கி எச்சரிக்கை! (வீடியோ)


யுக்ரைனில் சுதந்திர தினமான இன்று (24), ரஷ்யா தங்கள் மீது தாக்குதல் நடத்தினால், அதற்கான பதிலடி மிகவும் சக்திவாய்ந்ததாக இருக்கும் என்று யுக்ரைன் ஜனாதிபதி செலென்ஸ்கி எச்சரிக்கை விடுத்துளார்.

யுக்ரைனில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள போலந்து ஜனாதிபதி அண்ட்ரேஸ் டூடாவுடன் இணைந்து தலைநகா் கீவில் செய்தியாளா்களை செவ்வாய்க்கிழமை சந்தித்த செலென்ஸ்கி, இது குறித்து கூறியதாவது:



சோவியத் யூனியனிலிருந்து யுக்ரைன் பிரிந்ததைக் குறிக்கும் சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படுகிறது. அந்த நாளை முன்னிட்டு, ரஷ்ய மிக மோசமான தாக்குதல் நடவடிக்கைகளில் ஈடுபடலாம் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. அத்தகைய நடவடிக்கைகளை ரஷ்யா மேற்கொண்டால், அதற்கானயுக்ரைனின் பதிலடி மிக சக்திவாய்ந்ததாக இருக்கும் என்றாா்.



ரஷ்யப் படையெடுப்பு நடந்து 6 மாதங்கள் நிறைவடைகிறது. அதே நாளில் சோவியத் யூனியலிருந்து பிரிந்ததை சுதந்திர தினமாக யுக்ரைன் கொண்டாடுகிறது.

அந்த நாளில், யுக்ரைனின் அரசுக் கட்டடங்கள் உள்ளிட்ட முக்கிய நிலைகள் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தலாம் என்று அஞ்சப்படுகிறது.

இந்தச் சூழலில், அத்தகைய தாக்குதல்களுக்கு சக்திவாய்ந்த பதிலடி கொடுக்கப்படும் என்று ஜனாதிபதி செலென்ஸ்கி தற்போது எச்சரிக்கை விடுத்துள்ளார்.





எங்களது குரூப்பில் இணைந்து உலகில் இடம் பெறுகின்ற முக்கியச் செய்திகளை நம்பகத்தன்மையுடன் அறிந்து கொள்ளுங்கள்...

Post a Comment

0 Comments