Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

"சூதாட்ட நிறுவனங்களுடன் தொடர்பா?" - பங்களாதேஷ் கிரிக்கெட் வீரர் ஷகீப் அல் ஹசன் மீது எழும் புகார்கள்!


பங்களாதேஷ் கிரிக்கெட் நட்சத்திரமான ஷகீப் அல் ஹசன், சூதாட்ட நிறுவனத்துடன் பிராண்ட் அம்பாஸிடர் மற்றும் ஸ்பான்சர்ஷிப் ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

பங்களாதேஷ் கிரிக்கெட் நட்சத்திரமான ஷகீப் அல் ஹசன், 'Betwinner News' என்ற சூதாட்ட நிறுவனத்துடன் பிராண்ட் அம்பாஸிடர், ஸ்பான்சர்ஷிப் ஒப்பந்தங்கள் செய்துகொண்டதாகச் சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வருகின்றன.

"இந்தச் செய்தி உண்மையா அல்லது போலியான செய்தியா என்பது குறித்து ஷகீப் தரப்பிலிருந்து அதிகாரபூர்வ விளக்கம் எதுவும் வரவில்லை. இருப்பினும் இது போன்ற விஷயங்களை எளிதாகக் கடந்து சென்றுவிட முடியாது. இதன் உண்மைத் தன்மை குறித்து தீவிரமாக விசாரிக்க வேண்டும்" என்று கூறியுள்ளது பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியம் (BCB).

மேலும், இந்த விவகாரம் குறித்து ஹசனுக்கு நோட்டீஸ் அனுப்ப உள்ளதாகவும், இது உறுதி செய்யப்பட்டால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments