Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா...!! (முழு விபரம்)


ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் இரண்டாவது லீக் போட்டியில் பாகிஸ்தான் அணியை இந்திய அணி 5 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியுள்ளது.

நேற்றையதினம் (28) துபாய் மைதானத்தில் இடம்பெற்ற இப்போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணித் தலைவர் ரோஹித் சர்மா முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தார்.

முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணியின் ஆரம்ப வீரர்களாக அணியின் தலைவர் பாபர் அசாம் மற்றும் மொஹமட் றிஸ்வான் களமிறங்கினர். இந்த ஜோடியில் 2 பவுண்டரிகளை அடித்த பாபர் அசாம் 10 ஓட்டங்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.


பின்னர் வந்த பகார் சமானும் 10 ஓட்டங்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். இதன்பிறகு தொடக்க வீரர் மொஹமட் றிஸ்வானுடன் ஜோடி சேர்ந்த இப்திகார் அஹமட் ஒரு சிக்ஸர் 2 பவுண்டரிகளை அடித்து 22 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.

நீண்ட நேரம் களத்தில் நின்ற ஆரம்ப வீரர் மொஹமட் றிஸ்வான் 42 பந்துகளில் ஒரு சிக்ஸர் 4 பவுண்டரிகளுடன் 43 ஓட்டங்கள் எடுத்து ஹார்டிக் பாண்ட்யா பந்துவீச்சில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

தொடர்ந்து வந்த வீரர்கள் இந்திய வீரர்களின் பந்துவீச்சுக்கு தாக்குபிடிக்கமால் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.

அதற்கமைய 19.5 ஓவர்களில் 147 ஓட்டங்கள் எடுத்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்தனர்.இந்திய அணி சார்பில் புவனேஷ்வர் குமார் 4 விக்கெட்டுகளையும், ஹர்திக் பாண்டியா 3 விக்கெட்டுகளையும், அர்ஷ்தீப் சிங் 2 விக்கெட்டுகளையும், அவேஷ் கான் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

இதையடுத்து, 148 ஓட்டங்கள் எனும் வெற்றி இலக்கை நோக்கி இந்திய அணி துடுப்பெடுத்தாடியது.
இந்திய அணியில் கே.எல் ராகுல் ஓட்டம் எதுவுமின்றி ஆட்டமிழந்தார். இதன்பிறகு தனது 100ஆவது ரி20யில் விளையாடிய விராட் கோலி களமிறங்கினார். அவருடன் ஜோடியாக ஆடிய ரோகித் சர்மா சிக்ஸர் அடிக்க முயன்று பிடிகொடுத்து 12 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.

விராட் கோலி 34 பந்துகளில் 3 பவுண்டரிகள் 1 சிக்ஸருடன் 35 ஓட்டங்கள் எடுத்த நிலையில் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார்.

அதன்பின் களத்தில் இருந்த ரவீந்திர ஜடேஜா - சூர்யகுமார் யாதவ் ஜோடி அதிரடி கலந்த நிதானத்தை வெளிப்படுத்தி ஆடினர். சிறப்பான இணைப்பாட்டத்தை அமைத்து ஓட்ட சராசரியை உயர்த்தினர். ஆனால், ஓட்டங்களை வாரி எடுப்பார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சூர்யகுமார் யாதவ் ஒரு பவுண்டரியுடன் 18 ஓட்டங்கள் எடுத்த நிலையில் போல்ட் முறை மூலம் ஆட்டமிழந்தார்.

இதன்பிறகு களமிறங்கிய ஹர்திக் பாண்டியா ரவீந்திர ஜடேஜாவுடன் ஜோடி சேர்ந்தார். மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்த ஜோடி 50 ஓட்டங்களுக்கு மேல் இணைப்பாட்டத்தை அமைத்தனர்.

இந்திய அணியின் வெற்றிக்கு 6 பந்துகளில் 7 ஓட்டங்கள் தேவைப்பட்ட நிலையில் ஜடேஜா (35) போல்ட் முறையில் ஆட்டமிழந்தார்.

ஜடேஜாவின் விக்கெட்டுக்கு பிறகு ஆட்டத்தில் பரபரப்பு தொற்றிக்கொண்டது.

அந்த தருணத்தில் நிதானமாக மொஹமட் நவாஸின் 4ஆவது பந்தை சந்தித்த ஹர்திக் பாண்டியா ஒரு சிக்ஸரை அடித்து போட்டியை நிறைவுக்கு கொண்டு வந்தார்.

 இறுதியில், இந்திய அணி பாகிஸ்தானை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது.

இதற்கு முன்னர் கடந்த ரி20 உலகக் கிண்ணத்தில் இந்திய அணி பாகிஸ்தான் அணியிடம் தோல்வியைத் தழுவியிருந்தது. அதனை ஈடு செய்யும் வகையில் இப்போட்டி அமைந்துள்ளதாக இந்திய இரசிகர்கள் தெரிவிக்கின்றனர்.

PAKISTAN INNINGS (20 overs maximum)
BATTING RBM4S6SSR
Mohammad Rizwan †c Avesh Khan b Pandya43428241102.38
Babar Azam (c)c Arshdeep Singh b Kumar1091820111.11
Fakhar Zaman c †Karthik b Avesh Khan1062020166.66
Iftikhar Ahmed c †Karthik b Pandya28223321127.27
Khushdil Shah c Jadeja b Pandya27150028.57
Shadab Khan lbw b Kumar1092810111.11
Asif Ali c Yadav b Kumar971200128.57
Mohammad Nawaz c †Karthik b Arshdeep Singh1360033.33
Haris Rauf not out1371720185.71
Naseem Shah lbw b Kumar013000.00
Shahnawaz Dahani b Arshdeep Singh166802266.66
Extras(b 1, w 4)5 
TOTAL19.5 Ov (RR: 7.41)147
 
Fall of wickets: 1-15 (Babar Azam, 2.4 ov), 2-42 (Fakhar Zaman, 5.5 ov), 3-87 (Iftikhar Ahmed, 12.1 ov), 4-96 (Mohammad Rizwan, 14.1 ov), 5-97 (Khushdil Shah, 14.3 ov), 6-112 (Asif Ali, 16.3 ov), 7-114 (Mohammad Nawaz, 17.1 ov), 8-128 (Shadab Khan, 18.2 ov), 9-128 (Naseem Shah, 18.3 ov), 10-147 (Shahnawaz Dahani, 19.5 ov)
BOWLINGOMRWECON0S4S6SWDNB
Bhuvneshwar Kumar402646.50133100
Arshdeep Singh3.503328.60134120
Hardik Pandya402536.25102020
Avesh Khan201919.5042100
Yuzvendra Chahal403208.0041100
Ravindra Jadeja201105.5041000
 
INDIA INNINGS (Target: 148 runs from 20 overs)
BATTING RBM4S6SSR
Rohit Sharma (c)c Iftikhar Ahmed b Mohammad Nawaz1218440166.66
KL Rahul b Naseem Shah014000.00
Virat Kohli c Iftikhar Ahmed b Mohammad Nawaz35344731102.94
Ravindra Jadeja b Mohammad Nawaz35297422120.68
Suryakumar Yadav b Naseem Shah18183110100.00
Hardik Pandya not out33174141194.11
Dinesh Karthik †not out11300100.00
Extras(lb 5, w 9)14 
TOTAL19.4 Ov (RR: 7.52)148/5
 
Fall of wickets: 1-1 (KL Rahul, 0.2 ov), 2-50 (Rohit Sharma, 7.6 ov), 3-53 (Virat Kohli, 9.1 ov), 4-89 (Suryakumar Yadav, 14.2 ov), 5-141 (Ravindra Jadeja, 19.1 ov)
BOWLINGOMRWECON0S4S6SWDNB
Naseem Shah402726.75122120
Shahnawaz Dahani402907.2572020
Haris Rauf403508.75114120
Shadab Khan401904.75101000
Mohammad Nawaz3.403339.0071300
எங்களது குரூப்பில் இணைந்து உலகில் இடம் பெறுகின்ற முக்கியச் செய்திகளை நம்பகத்தன்மையுடன் அறிந்து கொள்ளுங்கள்...

Post a Comment

0 Comments