முட்டை விலையை குறைப்பதற்கு, கோழி பண்ணையாளர் சங்கம் இணக்கம் தெரிவித்துள்ளதாகவும், சந்தையில் முட்டையின் விலை, கட்டம் கட்டமாக குறைவடையும் என வர்த்தக மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
கோழிகளுக்கான தீவனம் மற்றும் மருந்துப் பொருட்களின் விலையேற்றம் காரணமாக, கோழிப்பண்ணை உற்பத்தியாளர்களும் அதிக செலவுகளை சுமக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக, அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எவ்வாறாயினும், அதிக விலைக்கு முட்டை விற்பனை செய்யும் வர்த்தகர்களை தேடி, தொடர்ந்தும் சுற்றிவளைப்புகள் நடத்தப்படும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
எங்களது குரூப்பில் இணைந்து உலகில் இடம் பெறுகின்ற முக்கியச் செய்திகளை நம்பகத்தன்மையுடன் அறிந்து கொள்ளுங்கள்...
0 Comments