Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

சுற்றுலாத்துறைக்கு புத்துயிரளிக்க சீனாவுக்கான தூதுவர் பாலித கோஹொன அழைப்பு...!


ஆசிய மலை சுற்றுலாக் கூட்டமைப்பு (Asian Mountain Tourism Alliance) அதன் ஆறாவது உச்சி மாநாட்டை கடந்த ஓகஸ்ட் 17-18 அன்று சீனாவின் குய்சோவில் உள்ள குயாங்கில் நடாத்தியது.

இந்த உச்சிமாநாட்டில் மாகாணத்தில் இருந்து குறிப்பாக கைவினைப் பொருட்கள் பலவற்றை காட்சிப்படுத்தப்பட்டதுடன், மத்திய, மாகாண மற்றும் நகர அரசாங்கங்களின் உயர்மட்ட அதிகாரிகள் மற்றும் இராஜதந்திர மற்றும் வணிகப் பிரதிநிதிகளின் பிரசன்னங்களால் அலங்கரிக்கப்பட்டது.



சீனாவுக்கான இலங்கைத் தூதுவர் கலாநிதி பாலித கோஹொன தனது விளக்கக்காட்சியில், இலங்கையில் பனி மூடிய சிகரங்கள் இல்லாத அதேவேளை, உலகின் மூன்று முக்கிய மதங்களான பௌத்தர்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லிம்களுக்கு புனிதமான உலகின் ஒரே உயரமான சிகரமான ஆதாமின் சிகரம் என அறியப்படும் ஸ்ரீ பாத இலங்கையில அமைந்துள்ளதாகத் தெரிவித்தார். ஆயிரக்கணக்கானோர் தமது மத ஆர்வத்தை வெளிப்படுத்தவும், சுதந்திரம் மற்றும் அமைதியின் ஒப்பற்ற உணர்வை அனுபவிக்கவும் இந்த மலையில் ஏறினர்.

தூதுவர் கலாநிதி கோஹொன, இலங்கையின் தேயிலை தேசத்தின் அழகிய பசுமை, புதிய தேயிலையின் நறுமணம், மலைத்தொடர்களை சூழ்ந்து கொண்டிருக்கும் ஆறுகள் மற்றும் நீர்வீழ்ச்சிகள் குறித்து பேசினார். பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், தற்போது பூட்டிக் ஹோட்டல்களாக மாற்றப்பட்டுள்ள பங்களாக்கள் நிரம்பத் தொடங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

கிரேக்கர்கள் இலங்கைத் தீவை 'செரண்டிப்' என்று அழைத்தனர். இந்த வார்த்தை ஒவ்வொரு மூலையிலும் ஒரு இன்ப அதிர்ச்சி என்ற அர்த்தமுடைய செரெண்டிபிட்டி என்ற ஆங்கில வார்த்தைக்கு வழிவகுத்தது. சீன மொழியில் இது யுவான் ஃபெங் எனப்படும். கலாநிதி கோஹொனா இலங்கையில் ஒரு 'யுவான் ஃபெங்' அனுபவத்திற்காக பார்வையாளர்களுக்கு அழைப்பு விடுத்தார்.

எங்களது குரூப்பில் இணைந்து உலகில் இடம் பெறுகின்ற முக்கியச் செய்திகளை நம்பகத்தன்மையுடன் அறிந்து கொள்ளுங்கள்...

Post a Comment

0 Comments