Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

மொட்டுக் கட்சி பிரதேச சபை உறுப்பினர் சுட்டுக்கொலை...!


கொட்டிகாவத்தை முல்லேரிய பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.

கொட்டிகாவத்தை பிரதேச சபையின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர் சுமுது ருக்ஷான் என்பவரே இவ்வாறு துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.

சுமுது ருக்ஷானை இலக்கு வைத்து இன்று (02) மாலை இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

முல்லேரியா வங்கிச் சந்திக்கு அருகில் பிரதேச சபை உறுப்பினர் நின்ற போது மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவரினால் இந்தக் துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.


நன்றி...
அததெரண

Post a Comment

0 Comments