Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

வெளிநாட்டு இராஜதந்திரிகளுக்கு அமைச்சர் அலி சப்ரி விளக்கம்...!


நாட்டின் தற்போதைய முன்னேற்றம் குறித்து

ஜெனிவா மனித உரிமைகள் பேரவையின் 51 ஆவது கூட்டத்தொடருக்கு முன்னதாக தற்போதைய நாட்டின் அபிவிருத்திகள் தொடர்பில் கொழும்பிலுள்ள வெளிநாட்டு தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்களை சந்தித்து வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி விளக்கமளித்தார். அமைச்சர் அலி சப்ரி,

வெளிவிவகார அமைச்சில் (15) தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்களை சந்தித்த போதே இவ்வாறு விளக்கமளித்தார்.

சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரத்தினம், அமைச்சின் செயலாளர் அருணி விஜேவர்த்தன மற்றும் நிதிச் செயலாளர் மஹிந்த சிறிவர்தன ஆகியோரும் விளக்கமளிக்க பங்களித்தனர்.

அரசியலமைப்புக்கமைவாக பதவிகளை ஜனநாயக ரீதியாக மாற்றுவது உட்பட இலங்கையின் தற்போதைய அபிவிருத்திகளை அமைச்சர் சப்ரி கோடிட்டுக் காட்டினார். மக்களுக்கான அதிக ஸ்திரத்தன்மைக்கு வழிவகுத்த சில உடனடி சவால்களை எதிர்கொள்வதில் ஏற்கனவே காணக்கூடிய முன்னேற்றத்தின் பல பகுதிகளை அவர் சுட்டிக் காட்டினார்.

அரசியல் முன்னணியில், சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் விளக்கினார். 19 ஆவது திருத்தத்தை திறம்பட மீட்டெடுக்கும் அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டு பாராளுமன்றத்திலுள்ளதையும் அவர் நினைவு கூர்ந்தார். 

இந்த நடவடிக்கை பாராளுமன்ற ஜனநாயகத்தை வலுப்படுத்துவதற்கும், அரசாங்கத்தின் நிர்வாகக் கிளைகளின் மேற்பார்வைக்கும் மற்றும் முக்கிய நிறுவனங்களின் சுதந்திரத்துக்கும் பங்களிக்கும். பயங்கரவாத தடைச் சட்டத்தின் விரிவான மறுஆய்வுக்காக தொடங்கப்பட்டுள்ள முன்னேற்றத்தையும் அவர் விளக்கினார். மக்களின் பொருளாதார மற்றும் சமூக உரிமைகளை உறுதி செய்வதற்கும், மேலும் ஏற்றத்தாழ்வுகளைத் தடுப்பதற்கும், தற்போதைய பொருளாதார சூழ்நிலையின் பாதகமான தாக்கத்தை மக்கள் தொகையின் பாதிக்கப்படக்கூடிய பிரிவுகளைத் தணிக்க அரசாங்கம் கவனம் செலுத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அண்மைய ஆண்டுகளில் நாட்டில் முன்னெப்போதும் இல்லாத சூழ்நிலை நிலவிய போதிலும், கோவிட்19 தொற்றுநோய்க்குப் பின்னர், உள்நாட்டு செயல்முறைகள் மூலம் மனித உரிமைகள் மற்றும் நல்லிணக்கத் துறையில் முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். மனித உரிமைகள், நீதி மற்றும் சமத்துவம் தொடர்பான விஷயங்களில் மேலும் முன்னேற்றமடையும் வகையில் ஒருமித்த கருத்தை உருவாக்கும் பணியில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது. ஜெனீவாவில் எதிர்வரும் 51 ஆவது கூட்டத்தொடரில் மனித உரிமைகள் பேரவையுடனான ஆக்கபூர்வமான ஈடுபாட்டை இலங்கை தொடருமென வெளிவிவகார அமைச்சர் வலியுறுத்தினார்.

நிதிச் செயலாளர் சிறிவர்த்தன, பாதகமான தாக்கங்களைத் தணிக்கும் நோக்கில், பாதிப்புக்குள்ளான குழுக்களுக்கு அரசாங்கம் மேற்கொண்டுள்ள சமூகப் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து கவனம் செலுத்தி, தற்போதைய பொருளாதார நிலைமை குறித்து விளக்கமளித்தார்.

அண்மையில் இடம்பெற்ற போராட்டங்கள் மற்றும் அவசரகாலச் சட்டம் அமுல்படுத்தப்பட்டமை தொடர்பான அரசாங்கத்தின் பதிலளிப்பு தொடர்பான சட்ட கட்டமைப்பை சட்ட மாஅதிபர் விளக்கினார். ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் கட்டமைப்பின் பல நடைமுறைகள் மற்றும் செயல்முறைகளுடன் இலங்கையின் தொடர்ச்சியான மற்றும் விரிவான ஈடுபாட்டை வெளிவிவகார செயலாளர் விஜேவர்த்தன எடுத்துரைத்தார்.

விளக்கக்காட்சிகளைத் தொடர்ந்து நடைபெற்ற கலந்துரையாடலின் போது, ​​ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் ஹனா சிங்கர்-ஹம்டி, சவால்களை எதிர்கொள்வதிலும், பாதிக்கப்படக்கூடிய குழுக்களின் சமூகப் பாதுகாப்பு வலையை விரிவுபடுத்துவதிலும் அரசாங்கத்தின் தொடர்ச்சியான முயற்சிகளுக்குப் பாராட்டு தெரிவித்தார்.

Post a Comment

0 Comments