Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

உணவுப் பொதி மற்றும் தேநீர் விலை குறைப்பு...!


இன்று (09) முதல் அமுலாகும் வகையில், உணவுப் பொதி மற்றும் தேநீரின் விலை குறைக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, ஒரு கோப்பை தேநீர் விலை 30 ரூபா வரை குறைக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்தார்.

உணவுப் பொதி ஒன்றின் விலை 10 வீதத்தால் குறைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

எரிவாயு மற்றும் எரிபொருள் விலை குறைக்கப்பட்டுள்ளதால், இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அசேல சம்பத் குறிப்பிட்டார்.

இதனிடையே அத்தியாவசியப் பொருட்களின் விலைகளும் குறைக்கப்பட்டுள்ளதால், இந்த வாரத்திற்குள் அதன் பயனையும் நுகர்வோர் அனுபவிக்கும் வகையிலான வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படும் என அவர் தெரிவித்தார்.

நுகர்வோர் விவகார அதிகார சபை மற்றும் துறைசார் அமைச்சருடன் கலந்துரையாடி, அப்பம், கொத்து, Fried Rice ஆகியவற்றுக்கான அதிகபட்ச விலையும் நிர்ணயிக்கப்படும் என அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் குறிப்பிட்டார்.

Post a Comment

0 Comments