Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

ஜனாதிபதி ரணிலுக்கு எலிசபெத் மகாராணி வாழ்த்து...



பிரித்தானியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான நட்புறவை தொடர எதிர்பார்த்திருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு எலிசபெத் மகாராணி தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு ராணி இரண்டாம் எலிசபெத் அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு ராணி இரண்டாம் எலிசபெத்தின் வாழ்த்துச் செய்தியை வழங்கியுள்ளது.

“இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் ஜனாதிபதியாக பதவியேற்ற உங்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

நீங்கள் ஜனாதிபதியாக இருக்கும் காலப்பகுதியில் எமது இரு நாடுகளுக்கிடையிலான அன்பான நட்புறவைத் தொடர நான் எதிர்பார்த்திருக்கின்றேன் என எலிசபெத் மகாராணி தெரிவித்துள்ளார்.


Post a Comment

0 Comments