
ஆகஸ்ட் மாதம் துபாய் விமான நிலையம் DXB மீண்டும் உலகின்
பரபரப்பான சர்வதேச விமான நிலையமாகத் திகழ்வதாக தரவுகள் மூலம்
தெரியவந்துள்ளது. 4.1 மில்லியனுக்கும் அதிகமான பயணிகள் துபாய்
விமான நிலையத்தில் இருந்து பயணித்துள்ளதாகவும், லண்டன் ஹீத்ரோ
விமான நிலையத்தை விட அதிக பயணிகளை கையாண்டதில் துபாய்
முதல் இடத்தில் உள்ளதாகவும் விமானத் தரவு நிறுவனமான OAG
தெரிவித்துள்ளது.
இந்த வரிசையில் இரண்டாவது இடத்தைப் பிடித்த லண்டன் ஹீத்ரோ,
ஆகஸ்ட் மாதத்தில் அதன் முந்தைய மாதத்தை விட 4 சதவீதம்
குறைந்துள்ளது. அதை தொடர்து ஆம்ஸ்டர்டாம் (3.15 மில்லியன், பாரிஸ்
CDG (3.14 மில்லியன்), இஸ்தான்புல் (2.9 மில்லியன்), பிராங்பேர்ட் (2.9
மில்லியன்), தோஹா (2.2 மில்லியன்), லண்டன் கேட்விக் (2.094 மில்லியன்),
சிங்கப்பூர் சாங்கி (2.089 மில்லியன்) மற்றும் மாட்ரிட் (2012 மில்லியன்)
ஆகும்.
மத்திய கிழக்கு பிராந்தியத்தின் தரவரிசையில் துபாயே ஆதிக்கம்
செலுத்துகிறது. துபாய்-ரியாத், மும்பை-துபாய், துபாய்-லண்டன் ஹீத்ரோ,
துபாய்-ஜித்தா, டெல்லி-துபாய் மற்றும் பஹ்ரைன்-துபாய் ஆகியவை முதல்
10 வழித்தடங்களில் உள்ளன ஜூலை மாதம், கடுமையான பணியாளர்
பற்றாக்குறைக்கு மத்தியில் விமான நிலைய செயல்பாடுகளை
மேம்படுத்துவதற்காக விமானங்களில் தற்காலிக திறன் வரம்புகளை
ஹீத்ரோ விமான நிலையம் அறிமுகப்படுத்தியது.
“பிரிட்டன் மற்றும் ஐரோப்பாவில் உள்ள விமான நிலையங்கள் கடந்த சில
மாதங்களாக ஆயிரக்கணக்கான விமானங்களை ரத்து செய்ய வேண்டிய
கட்டாயம் ஏற்பட்டது, இதனால் பயணத் தேவையின் எழுச்சியைப் பூர்த்தி
செய்ய பணியமர்த்தலை அதிகரிக்க முடியவில்லை” என்று ஹீத்ரோ
விமான நிலையம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
எங்களது குரூப்பில் இணைந்து உலகில் இடம் பெறுகின்ற முக்கியச் செய்திகளை நம்பகத்தன்மையுடன் அறிந்து கொள்ளுங்கள்...
0 Comments