Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

பல்கலைக்கழக விரிவுரைகள் நடைமுறை வாழ்வியலை முதிர்ச்சியூட்டும் தேர்ச்சியை கொண்டிருப்பது அவசியம்


சமூக இலக்குகள்,தொழிற்பாடுகள், அசைவியக்கம் மற்றும் முன்னேற்றம் போன்ற ஒன்றுடனொன்று தொடர்புடைய இயங்கியல் நடைமுறைகளில் மையச்சக்கரமாக தொழிற்படும் வினைத்திறனை தீர்மானிப்பவர்கள் விரிவுரையாளர்களே.என,தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் தெரிவித்தார்.

விரிவுரையாளர்களின் கல்வித்தரத்தை மேம்படுத்துவதற்கான ஆறுமாத பயிற்சிநெறியை பூர்த்தி செய்தோருக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் உரையாற்றும்போதே விரிவுரையாளர் ரமீஸ்அப்துல்லா இவ்வாறு தெரிவித்தார்.

பல்கலைக்கழகத்தில் புதிதாக நியமனம்பெற்ற விரிவுரையாளர்களுக்கென இப்பயிற்சிநெறி நடாத்தப்பட்டது.ஊழியர்கள் மேம்பாட்டு மையத்தின் பணிப்பாளர் பேராசிரியர் ஏ.ஜெஃபர் தலைமையில் செவ்வாய்க்கிழமை (16) நடைபெற்ற இந்நிகழ்வில், பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றிய அவர் மேலும் தெரிவித்ததாவது,

இலங்கை போன்ற நாடுகளில் விரிவுரையாளர்களின் பணி தொடர்பான புதிய நோக்கம், தேவை என்பன நன்கு அங்கீகரிக்கப்பட்டுள்ளன. மிகவும் பொறுமையாக விருத்தி செய்ய வேண்டிய சமூக பிரிவினராக விரிவுரையாளர்கள் காணப்படுகின்றனர். மிக விரிவான பாடத்திட்டங்களை தயாரித்து தொடர்ச்சியாக அவற்றை மீட்டு கொண்டிருப்பது,இவர்களின் நவீன தேவையாக மாறி வருகிறது.

பல்கலைக்கழகங்களில் போதியளவு அறிவை வழங்குதல் மட்டும் போதுமானதன்று, அத்தகைய அறிவை நடைமுறை வாழ்வில் பிரயோகிப்பதற்கான தேர்ச்சிகளை விருத்தி செய்வதில் அதிக கவனம் செலுத்துவது அவசியம். விரிவுரையாளர்கள் என்ற நோக்கில் மாத்திரமின்றி சமூக மாற்றங்களை வழிப்படுத்துபவர்கள், விசைப்படுத்துபவர்கள் என்ற முறையிலும் இவர்கள் முக்கியமானவர்களாகத் திகழ்கின்றனர்.

பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் இயல்பாகவே உயரிய சமூகத் தொடர்புகளை பெறுவதால், சமூக மட்டத்திலும் இவர்கள் அங்கீகாரம் பெறுகின்றனர். இவர்களின் சமூக அந்தஸ்து ஒப்பீட்டு ரீதியில் உயர்வானதே! எனினும்,மொழியறிவு, விடய உள்ளடக்கம், கற்பித்தல் நுட்பங்கள் மற்றும் சமூக திறன்கள் என்பன இவர்களிடம் போதியளவு இல்லை என்றும் உணரப்படுகிறதது.

புத்துணர்ச்சி நோக்கும், தொடர்கல்வி ஊக்கமும், பன்மொழித் தேர்ச்சியும், தொழில் நுட்ப தகைமையும், எங்கும் எப்போதும் பணியாற்றும் மனப்பாங்குமுள்ளவர்களே விரிவுரையாளராக பணியாற்ற முடியும்.

நன்றி...
தினகரன்

Post a Comment

0 Comments