Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

பத்தலங்குண்டு தீவு மக்களின் தண்ணீருக்கான போராட்டம்!

 

புத்தளம் மாவட்டத்தில் கல்பிட்டி, பத்தலங்குண்டு தீவில் வசிக்கும் மீன்பிடித் தொழிலாளர்கள் பாரிய குடிநீர் பிரச்சினையை எதிர்நோக்கி வருகின்றனர்.

கல்பிட்டி பத்தலங்குண்டு தீவு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இயற்கை அழகுமிக்க தீவு ஆகும். அதன் அழகு விபரிக்க முடியாதது.

அது எவ்வளவு அழகாக இருந்தாலும், அங்கு வாழ்பவர்கள் சிரமமான வாழ்க்கையை நடத்துகிறார்கள். பத்தலங்குண்டு தீவில் தங்கி வாழ்வோரில் பெரும்பான்மையானவர்கள் மீனவர்கள். அங்கு சுமார் 1500 மீனவர்கள் உள்ளனர்.

சுத்தமான குடிநீர் இன்மையால் அங்குள்ள மீனவக் குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. அவர்கள் கடற்கரையில் குழிகளை வெட்டி குடிநீரை பெற்று வருகின்றனர். தண்ணீர் மிகவும் அழுக்கு நிறத்தில் உள்ளது. கடற்கரையில் உள்ள அழுக்கு மணல் தண்ணீரில் கலக்கிறது.

கரைக்கு அருகில் குழிகள் அமைத்து தண்ணீர் எடுக்கும் இடங்கள் ஊற்று எனப்படும். ஒரு வாளி தண்ணீரை நிரப்ப அரை மணி நேரம் ஆகும்.

இவ்வாறு தண்ணீரை எடுத்து வீட்டில் பெரிய பீப்பாய்களில் சேமித்து வைக்கும் போது, சிறிது நேரத்தில் கழிவுநீர் பீப்பாயின் அடியில் படிந்து விடுகின்றது. அதன் பின்னர் அந்தத் தண்ணீரை அங்குள்ள மக்கள் அருந்துகின்றனர். நாளாந்தம் தண்ணீருக்காக இவ்வாறு சிரமப்பட வேண்டியுள்ளதாக மக்கள் கூறுகின்றனர்.

Post a Comment

0 Comments