Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

நாவலப்பிட்டியில் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்காக காத்தான்குடியில் நிவாரண நிதி சேகரிப்பு..


கடந்த சில நாட்களாக நாட்டில் தொடர்ச்சியாக பெய்துவரும் கடும் மழை மற்றும் மண்சரிவு காரணமாக நாட்டின் பல பாகங்களிலும் மக்கள் வெகுவாக பாதித்துள்ளனர்.

இவ் அனர்த்தத்தினால் நாவலப்பிட்டி பிரதேச மக்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதுடன் . அத்தியாவசிய தேவைகளைக் கூட நிவர்த்தி செய்ய முடியாத நிலையில் சிரமப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் நோக்கில் காத்தான்குடி வர்த்தக சங்கம் பாதிக்கப்பட்ட மக்களுக்கான “நிவாரண நிதி சேகரிப்பு” வேலைத்திட்டம் ஒன்றை காத்தான்குடி பஸ்மலா சதுக்கத்தில் முன்னெடுத்துள்ளது.

சேகரிக்கப்படும் நிதி மற்றும் உலர் உணவுகள் திங்கட்கிழமை பாதிக்கப்பட்டவர்களுக்கு நேரடியாக வழங்குவதற்கான் ஏற்பாடுகள் காத்தான்குடி வர்த்தக சங்கத்தினால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

(பஹத் ஜூனைட் - ஊடகவியலாளர்)

Post a Comment

0 Comments