Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

குரங்கு அம்மை தொடர்பில் இன்று முதல் பரிசோதனைகள்...!


கொழும்பு, கண்டியில் மத்திய நிலையங்கள்

நாட்டில் குரங்கு அம்மை நோயாளர்கள் உள்ளனரா என்பதை இனங்காணும் வகையில் இன்று முதல் விசேட பரிசோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. 

அது தொடர்பில் நேற்று சுகாதார அமைச்சின் தொழில்நுட்ப சேவைகள் பணிப்பாளர் டாக்டர் அன்வர் ஹம்தானி தெரிவிக்கையில்: கொழும்பு பொரளையில் உள்ள மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் கண்டி தேசிய வைத்தியசாலை சுற்றாடலிலும் நாளை முதல் குரங்கு அம்மை நோய் பரிசோதனை மத்திய நிலையங்கள் அமைக்கப்பட்டு அந்த நோய் தொடர்பான அறிகுறிகள் காணப்படுபவர்களுக்கு விசேட பரிசோதனைகள் நடத்தப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

குரங்கு அம்மை நோய்க்கு தேவையான முன்னோடி ஆயத்த நடவடிக்கையாக பரிசோதனை உபகரண தொகுதி உலக சுகாதார ஸ்தாபனத்தினால் கடந்த சில தினங்களுக்கு முன் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளது.

அந்த தொகுதியில் 125 பரிசோதனை உபகரணத் தொகுதிகள் காணப்படுவதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கையில் இதுவரை குரங்கு அம்மை நோய் தொற்றாளர் எவரும் இனங்காணப்படவில்லை.

Post a Comment

0 Comments