Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

ஈலோன் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் என்றால் என்ன? ஆயிரக்கணக்கான செயற்கைக்கோள்களை விண்வெளிக்கு அனுப்புவது ஏன்?ஈலோன் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் ஏராளமான செயற்கைக்கோள்களை வட்டப்பாதைக்கு அனுப்பிக்கொண்டிருக்கிறது. இதனை வானத்தில் பார்த்ததாகவும் பலர் தெரிவிக்கின்றனர்.

பூமிக்கு அதிவேக இணைய வசதியை வழங்கும் திட்டமான ஸ்டார்லிங்க் திட்டத்தின் ஒரு பகுதிதான் இவை.

ஸ்டார்லிங் என்பது என்ன? எப்படி செயல்படுகிறது?

செயற்கைக்கோள்களின் கூட்டமைப்பு மூலம் பூமிக்கு மிக அதிவேகமான இணைய சேவையை ஸ்டார்லிங்க் வழங்கும்.

அதிவேக இணைய வசதி கிடைக்காத தொலைதூரப் பகுதிகளுக்கு இந்த சேவை வழங்குவதே இதன் குறிக்கோள்.

இணைய வசதி கிடைக்காத, இப்படியான மக்கள் உலகம் முழுவதும் இருக்கின்றனர் என்கிறார் போர்ட்ஸ்மௌத் பல்கலைக்கழகத்தின் விண்வெளி திட்டங்களின் மேலாளர் லுசிந்தா கிங்.

முடிந்தளவு வேகத்தில், அதிவேக இணையவசதி வழங்குவதற்கு ஏதுவாக புவி வட்டபாதையின் குறைந்த உயரத்தில் இந்த ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்கள் நிலைநிறுத்தப்படும்.

எப்படியாகினும், பூமிப்பரப்பு மொத்தத்துக்கும் சேவை வழங்க இன்னும் ஏராளமான குறைந்த உயரத்திலான செயற்கைக்கோள்கள் தேவைப்படும்.

2018ஆம் ஆண்டிலிருந்து இதுவரை சுமார் 3000 செயற்கைக்கோள்களை ஸ்டார்லிங்க் திட்டத்துக்காக அனுப்பியிருக்கலாம். காலப்போக்கில் இது சுமார் 10ஆயிரம் முதல் 12,000செயற்கைக்கோள்களை பயன்படுத்தலாம் என்கிறார் கிரிஸ் ஹால்.

அத்துடன், இதுபோன்ற திட்டங்களால் மலை பிரதேசங்களிலும் பாலைவனங்களிலும் இருக்கும் தொலைதூர பகுதிகளுக்கு கூட இணைய சேவையை பெறமுடியும். இல்லாவிட்டால், கேபிள்கள் மூலம் புவி வழியே அந்தப் பகுதிகளை இணைப்பதற்கான உள்கட்டமைப்பு வசதிகளை செய்யவே பெரும் செலவாகும் என்றும் அவர் தெரிவித்தார்.ஸ்டார்லிங்க்

சந்தையின் பிற இணைய சேவை வழங்கும் நிறுவனங்களை விட ஒப்பீட்டளவில் ஸ்டார்லிங்க் இணையம் குறைவாகவே உள்ளது.

உதாரணத்துக்கு பிரிட்டனை எடுத்துக்கொண்டால், 96% வீடுகளில் அதிவேக இணைய வசதி உண்டு. அதேபோல, அமெரிக்காவிலும், ஐரோப்பிய ஒன்றியத்தித்திலும் கூட 90% வீடுகளில் உண்டு. இப்படியாக பெரும்பாலான வளர்ந்த நாடுகள் ஏற்கனவே நன்கு இணைக்கப்பட்டுள்ளன.

தற்போது 36 நாடுகளில் 4 லட்சம் வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளதாக ஸ்டார்லிங்க் நிறுவனம் தெரிவிக்கிறது. குறிப்பாக வட அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஐரோப்பா ஆகிய பகுதிகளில் ஸ்டார்லிங்க் தற்போது சேவை வழங்குகிறது.

மேலும், சீரான இணைய சேவை இல்லாத பகுதிகளான ஆசியா, ஆப்பிரிக்கா, தென் அமெரிக்காவுக்கும் சேர்த்து சேவையை அடுத்த ஆண்டு ஸ்டார்லிங்க் விரிவுபடுத்த உள்ளது.

ஆப்பிரிக்காவில் பல வீடுகளுக்கு ஸ்டார்லிங்க் இணையசேவையின் விலை அதிகமாக இருப்பதாக சொல்லப்படுகிறது. ஆனால், தொலைதூரப்பகுதிகளில் இருக்கும் மருத்துவமனைகளையும் பள்ளிகளையும் இணைப்பதில் இது முக்கிய பங்கு வகிக்கும் என்று பேராசிரியர் சா இத் மொஸ்டேஷார்.யுக்ரேனில் ஸ்டார்லிங்க் எப்படி உதவுகிறது?

யுக்ரேனில் ரஷ்ய படையெடுப்பின் போது யுக்ரேனின் இணைய சேவையை நிறுத்தி, சமூக வலைதளப் பக்கங்களை முடக்க ரஷ்யா முயற்சித்தது.

ஆனால், ரஷ்யப்படைகள் உள்ளே நுழைந்ததும், தனது ஸ்டார்லிங்க் இணைய சேவையை ஈலோன் மஸ்க் வழங்கினார். இணைய சேவைக்கான சுமார் 15,000 தொகுப்புகள் (ரௌட்டர், டிஷ் அடங்கிய தொகுப்பு) உடனடியாக அந்நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

ஒரு அரசு பொது சேவையைப் போல, ஸ்டார்லிங்க் அதைத் தொடர்ந்து இயக்கத்திலேயே வைத்திருந்தது. இதை ரஷ்யர்களால் முறியடிக்க முடியவில்லை.

போர் சமயத்தில் தலைமைச் செயலகத்தில் இருந்து களத்திலிருக்கும் வீரர்களுடன் தொடர்பு கொள்ள இது உதவியது. மற்ற சேவைகளைப்போல இதனை எளிதில் முடக்க முடியாது. அத்துடன், இதை நிறுவுவதற்கு வெறும் 15 நிமிடங்களே போதுமானவை என்கிறார் லண்டன் கிங்ஸ் கல்லூரி ஆய்வாளர் மெரினா மிரோன்.தொலைநோக்கிப் படங்களில் குறுக்கே கோடாக வந்து நட்சத்திரங்கள் மற்றும் கோள்களின் பார்வையை மறைத்துவிடவும் வாய்ப்புண்டு

விண்வெளி ஒழுங்கை ஸ்டார்லிங்க் குலைக்கிறதா?

ஸ்டார்லிங்க்கைத் தவிர, OneWeb மற்றும் Viasat போன்ற செயற்கைக்கோள் இணைய சேவைகளை வழங்கும் போட்டியாளர்களும் ஆயிரக்கணக்கான செயற்கைக்கோள்களை, குறைந்த புவி சுற்றுவட்டப் பாதைக்கு அனுப்புகின்றனர். அதுவும் பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும் என்கிறார் சைத் மொஸ்தேஷர்.

"இடம் குறைவதோடு, மோதல்கள் ஏர்பட வாய்ப்பிருப்பதால் பாதுகாப்பும் கேள்விக்குறியாகிறது. இந்த செயற்கைக்கோள்கள் மற்ற செயற்கைக்கோள்கள் மீது மோது இடிபாடுகளின் துகள்களை உருவாக்கலாம்." என்றும் அவர் தெரிவிக்கிறார். சீனாவின் விண்வெளி நிலையத்திற்கு அருகில் காணாமல் போனது உட்பட, சமீபத்தில் சில ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்கள் காணாமல்போயின.

"இதுபோல விண்வெளியில் செயலிழந்தவை, காணாமல் போனவை, உடைந்து துண்டுகளானவை என அதிகமான துண்டுகள் இருந்தால், அது எதிர்காலத்தில் இந்த குறைந்த உயரத்திலான புவிவட்டப்பாதையை பயன்படுத்த முடியாததாக்கிவிடும்" என்றும் எச்சரிக்கிறார் போர்ட்ஸ்மவுத் பல்கலைக்கழகத்தின் டாக்டர் கிங்.

இந்த வகையில், ஸ்டார்லிங்கின் செயற்கைக்கோள்களும் வானியலாளர்களுக்கு சிக்கல்களை உருவாக்குகின்றன. ஸ்டார்லிங்க்கின் இந்த செயற்கைக்கோள்களை சூரிய உதயம் மற்றும் சூரிய அஸ்தமனத்தின் போது, ​​வெறும் கண்களாலேயே பார்க்கமுடியும்.

ஆனால், இது தொலைநோக்கிப் படங்களில் குறுக்கே ஒரு கோடு போல வந்து நட்சத்திரங்கள் மற்றும் கோள்களின் பார்வையை மறைத்துவிடவும் வாய்ப்புண்டு. இந்த விவகாரங்களையெல்லாம் வானியல் வல்லுநர்கள்தான் ஆரம்பத்தில் பார்த்தார்கள். அவர்கள்தான் முதலில் புகாரும் செய்தார்கள்." என்கிறார் பேராசிரியர் மொஸ்டேஷார்.

Post a Comment

0 Comments