Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

சீரற்ற வானிலையால் நாவலப்பிட்டியில் நீரில் அடித்துச் செல்லப்பட்ட மூவரைக் காணவில்லை!



சீரற்ற வானிலையால் மலையகத்தில் பல இயற்கை அனர்த்தங்கள் பதிவாகியுள்ளன.

இதற்கமைய நாவலப்பிட்டி கெட்டபுலா – அக்கரகந்த தோட்டத்தில் மூவர் நீரில் அள்ளுண்டு செல்லப்பட்டுள்ளனர்.

நேற்று (01) பகல் 2 மணியளவில் இந்தச் சம்பவம் பதிவாகியுள்ளது.

தோட்டத் தொழிலுக்குச் சென்றிருந்த 3 பிள்ளைகளின் தாயான 45 வயதான ஜெயலெட்சுமி கயற்றின் உதவியுடன் பாலத்தை கடக்க முற்பட்ட போது கை நழுவி ஆற்றில் வீழ்ந்துள்ளார்.

இதனையடுத்து அத்தோட்டத்தைச் சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையான 52 வயதான சத்தியசீலன் மற்றும் 3 பிள்ளைகளின் தந்தையான 36 வயதான சந்திரமோகன் ஆகியோர் நீரில் அடித்துச் செல்லப்பட்ட பெண்ணை காப்பாற்ற முயற்சித்த போது, அவர்களும் நீரில் அடித்துச் செல்லப்பட்டனர்.

இவர்களை தேடும் பணிகளுக்காக இன்று (02) பகல் 12 மணியளவில் கொத்மலை இராணுவ நிலையத்தின் இராணுவத்தினர் வருகை தந்துள்ளதுடன் நாவலப்பிட்டி பொலிஸாரும், பொதுமக்களும் இணைந்து, காணாமல் போனவர்களைத் தேடும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

Post a Comment

0 Comments