Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

ஹிருணிகா உள்ளிட்டோரை கூண்டில் ஏற்றுவதற்கு மறுத்த நீதிமன்றம் வழக்கை திகதி அறிவிப்பு எதுவுமின்றி மூடிவைக்க உத்தரவு!


கோட்டை, செத்தம் வீதியில் ஜனாதிபதி மாளிகைக்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டமையை மையப்படுத்தி ஹிருணிகா பிரேமசந்திர உள்ளிட்ட 10 பேரை சந்தேக நபர்களாகப் பெயரிட கோட்டை பொலிஸார் முன்வைத்த கோரிக்கையை கோட்டை நீதிவான் திலின கமகே இன்று (05) நிராகரித்தார்.

ஹிருணிகா சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி ஃபர்மான் காஸிம், சிரேஷ்ட சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா ஆகியோருடன் சட்டத்தரணி ஹஃபீல் ஃபாரிஸ் முன்வைத்த வாதங்களை ஏற்றுக்கொண்டே நீதிவான் இதற்கான உத்தரவைப் பிறப்பித்தார்.

கடந்த ஜுலை 6 ஆம் திகதி ஜனாதிபதி மாளிகை முன்பாகப் போராட்டத்தில் ஈடுபட்டமைக்காக ஹிருணிகா உள்ளிட்ட 10 பேர் கைது செய்யப்பட்டு பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

இந்நிலையில் இன்று அவர்களை நீதிமன்றில் ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி அவர்கள் நீதிமன்றில் ஆஜராகினர்.

இதன்போது நீதிமன்றில் வாதங்களை முன்வைத்த சட்டத்தரணி ஹஃபீல் ஃபாரிஸ், ஹிருணிகா உள்ளிட்டோர் ஜுலை 6 ஆம் திகதி கைது செய்யப்பட்டதாகவும் எனினும் அன்றைய தினம் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்படாத அவர்களை நீதிமன்றில் அவர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கான தயார்ப்படுத்தல் ஜுலை 25 ஆம் திகதியின் பின்னரேயே இடம்பெற்றதாக சுட்டிக்காட்டினார்.

அப்படியானால் ஆட்சிமாற்றத்தின் கரங்களும் ஹிருணிகாவுக்கு எதிரான வழக்கின் பின்னணியில் இருக்கின்றதாவென அவர் கேள்வி எழுப்பினார்.

இந்நிலையில் ஹிருணிகா உள்ளிட்டோரை சந்தேக நபர் கூண்டில் கூட ஏற்றுவதற்கு மறுத்த நீதிவான் திலின கமகே, பொலிஸாரின் கோரிக்கை பிரகாரம் குறித்த 10 பேரையும் சந்தேக நபர்களாகப் பெயரிடுவதற்கு மறுத்து வழக்கை திகதி அறிவிப்பு எதுவுமின்றி மூடிவைக்க உத்தரவிட்டார்.

Post a Comment

0 Comments