Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

சீனாவில் கடும் அனல்காற்று: கூடுதல் நிவாரண நடவடிக்கை...!


சீனா அனல்காற்றால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரண நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளது.

வழக்கத்துக்கு மாறான அதிக வெப்பநிலையும் நீடித்த வரட்சியும் நாட்டின் பல வட்டாரங்களைப் பாதித்துள்ளன. விளைச்சல் குறைந்துள்ளது. குடிநீர் விநியோகத்தில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

சொங்சிங் நகருக்கு அதிகாரிகள் தண்ணீர்த் தொட்டிகளை அனுப்பியுள்ளனர். ஹூபே மாநிலத்தில் நீர்ப்பாசனத்துக்காக அதிக அளவு தண்ணீரையும் அவர்கள் திறந்துவிட்டுள்ளனர். பேரிடர் நிவாரண நிதிக்காக சீனா 30 மில்லியன் டொலரை ஒதுக்கியுள்ளது.

சீசுவான் மாநிலத்தில் மின்சார விநியோகத்துக்கு அனல்காற்று இடையூறாக உள்ளது. ஆங்காங்கே நீர்மின்சார உற்பத்தியில் பிரச்சினை ஏற்படுவதாகத் தகவல்கள் கூறுகின்றன.

மின்சாரத் தட்டுப்பாட்டைத் தணிப்பதற்கு அந்த வட்டாரத்தில் உள்ள அனைத்துத் தொழிற்சாலைகளையும் ஆறு நாட்களுக்கு மூடுமாறு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

Post a Comment

0 Comments