Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

இலத்திரனியல் முச்சக்கரவண்டிகளை பதிவு செய்வதற்கான போக்குவரத்து சட்டத்தின் திருத்தத்திற்கு அங்கீகாரம்...!


இலத்திரனியல் முச்சக்கரவண்டிகளை பதிவு செய்யும் வகையிலான ஏற்பாடுகளை உள்ளடக்கிய மோட்டார் போக்குவரத்து சட்டத்தின் திருத்தத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இலங்கைக்குள் புதைபடிவ எரிபொருட்களைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக மின்சார சக்தியுடன் இயங்கும் வாகனங்களை பிரபலப்படுத்துவதற்காக மின்சார முச்சக்கரவண்டிகளை பயன்படுத்துவதற்கான சந்தர்ப்பத்தை பல தரப்பினர் கோரியுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், தற்போதைய சட்டத்தில் தேவையான விதிகள் எதுவும் இல்லை என்பதால் மோட்டார் போக்குவரத்துச் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட வேண்டும் எனக் கோரப்பட்டது.

இதன்படி, இலத்திரனியல் முச்சக்கரவண்டிகளை பதிவு செய்வதற்கு உரிய திருத்தங்கள் உட்பட தற்போதைய மோட்டார் போக்குவரத்து சட்டத்தில் திருத்தம் செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Post a Comment

0 Comments