Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

`He is Back'- நடிகர் கமல்ஹாசனை டேக் செய்து உதயநிதி போட்ட ட்வீட்! வைரலாகும் செம அப்டேட்!

 

இயக்குநர் சங்கர் மற்றும் கமல்ஹாசன் கூட்டணியில் பிரம்மாண்டமாக உருவாகிறது இந்தியன் 2 திரைப்படம். லைகா நிறுவனம் பெரும் பொருட் செலவில் தயாரிக்கும் இந்த படத்தில், ரெட் ஜெயிண்ட் மூவிஸ் தயாரிப்பு பணியில் இணைந்துள்ளது.

முன்னதாக கடந்த வருடம் நடந்த இந்தியன் 2 படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்து காரணமாக படப்பிடிப்பு முடங்கியது. தொழில்நுட்ப கலைஞர்கள் உள்ளிட்ட மூவர் படப்பிடிப்பு தள விபத்தில் உயிரிழந்தனர்.

image

இதன்பின்னர், இயக்குநர் சங்கர் மற்றும் லைகா புரொடக்ஷன், கமல்ஹாசன் இடையே விரிசல் உண்டானது. தற்போது பிரச்னைகள் முடிவுக்கு வந்துள்ள நிலையில், இன்று (ஆகஸ்ட் 24) சென்னையில் இந்தியன் 2 படத்தின் ஷூட்டிங் மீண்டும் தொடங்குவதாக சில தினங்களுக்கு முன் தகவல் வெளியானது.

image

இதில் கமல்ஹாசன் இல்லாத காட்சிகள் படமாக்கப்படுகின்றன. மீதமுள்ள காட்சிகள் விரைவில் எடுக்க இந்தியன் 2 படக்குழு திட்டமிட்டுள்ளதாக சொல்லப்பட்டது. இந்நிலையில் இப்படத்தில் ரெட் ஜெயிண்ட் மூவிஸ் இணைந்திருப்பதாக நேற்று இரவு தகவல் வெளியாகியுள்ளது. ரெட் ஜெயிண்ட்ஸ் சார்பில் நேற்று இரவு 12.01-க்கு இந்த தகவல் சமூகவலைதள பக்கத்தில் தெரிவிக்கப்பட்டது.

image

உதயநிதி ஸ்டாலின் மற்றும் சுபாஸ்கரன் இணைந்து தயாரிப்பதாக அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அப்டேட்டுடன், படத்தில் போஸ்டர் ஒன்றையும் படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் `He is Back’ என்ற வரிகளுடன் இந்தியன் முதல் பாகத்தில் முதியவராக வந்த தோற்றத்தில் கமல் நடிக்கிறார்.

image

இப்படத்தின் மறு படப்பிடிப்பு இன்று தொடங்குமென தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் அதை மறுத்துள்ளார் கமல்ஹாசன். அவர் பதிவின்படி, மறு படப்பிடிப்பு பணிகள் செப்டம்பர் மாதம் தொடங்கப்பட உள்ளது.

எங்களது குரூப்பில் இணைந்து உலகில் இடம் பெறுகின்ற முக்கியச் செய்திகளை நம்பகத்தன்மையுடன் அறிந்து கொள்ளுங்கள்...

https://chat.whatsapp.com/CdQrB2OOcuB80nQg6k4iDh 

Post a Comment

0 Comments