Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

IMF பிரதிநிதிகள் குழு இலங்கை வருகை...!

 

இன்று பேச்சுவார்த்தை ஆரம்பம்

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று நேற்று இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ளது.

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள அந்த குழுவினர் இன்றைய தினம் அரசாங்கத்துடன் தொழில்நுட்ப

பேச்சு வார்த்தையை ஆரம்பிக்கவுள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான தூதுக்குழுவின் பிரதானி பீற்றர் ப்ரூவர் மற்றும் அந்த நிதியத்தின் இலங்கை விவகாரம் தொடர்பான தலைவர் மசிரோ நோசாகி ஆகியோர் குழுவுக்கு தலைமை தாங்குகின்றனர்.

விசேட கலந்துரையாடல்களை மேற்கொள்ளவுள்ள சர்வதேச நாணய நிதியத்தின் குழுவினர் எதிர்வரும் 31 ஆம் திகதி வரை நாட்டில் தங்கியிருப்பர்.

அவர்கள் அரசாங்கத்தின் முக்கியஸ்தர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரையும் சந்திக்கவுள்ளனர்.

அதே வேளை, இந்த வருட இறுதியில் சர்வதேச நாணய நிதியத்திலிருந்து நாடு எதிர்பார்க்கும் கடனை பெற்றுக் கொள்ள முடியும் என்றும் மத்திய வங்கியின் ஆளுநர் மேலும் தெரிவித்துள்ளார்.

எங்களது குரூப்பில் இணைந்து உலகில் இடம் பெறுகின்ற முக்கியச் செய்திகளை நம்பகத்தன்மையுடன் அறிந்து கொள்ளுங்கள்...

Post a Comment

0 Comments