Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

James Webb எடுத்துள்ள வியாழன் கிரகத்தின் புதிய படம்...!


James Webb தொலைநோக்கியில் பதிவான வியாழன் கிரகத்தின் தோற்றத்தை நாசா வெளியிட்டுள்ளது.

விண்வெளி ஆய்விற்காக 10 பில்லியன் டொலர் செலவில் உருவாக்கப்பட்ட James Webb எனப்படும் உலகிலேயே மிகப்பெரிய, சக்திவாய்ந்த விண்வெளி தொலைநோக்கியை நாசா கடந்த ஆண்டு டிசம்பா் மாதம் விண்வெளியில் செலுத்தியது.

இந்த விண்வெளி தொலைநோக்கி எடுத்த புகைப்படங்களை நாசா அடுத்தடுத்து வெளியிட்டு வருகிறது.

குறிப்பாக, 1380 கோடி ஆண்டுகளுக்கு முன்னா் பெருவெடிப்பு மூலம் இந்த பிரபஞ்சம் உருவானதாக நம்பப்படுகிறது. பிரபஞ்சத்தில் நமது பூமி இடம்பெற்றுள்ள பால்வெளி மண்டலம் உள்ளிட்ட கோடிக்கணக்கான மண்டலங்கள் இடம்பெற்றுள்ளன.

இவற்றில், James Webb தொலைநோக்கியின் மூலம் நாசா வெளியிட்டுள்ள புகைப்படங்களில் ஏராளமான உடுத்திரள்கள் காணப்படுகின்றன. இந்தப் புகைப்படத்தின் ஒரு பகுதியானது, பெருவெடிப்பு நிகழ்ந்த ஆரம்ப காலத்தைக் காட்டுவதாக நாசா தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், நேற்று நாசா James Webb தொலைநோக்கியில் பதிவான வியாழன் கிரகத்தின் தோற்றப்படத்தை வெளியிட்டுள்ளது.

சூரியக் குடும்பத்தின் 5-வது கோளாகக் கருதப்படும் வியாழன், சூரியனிலிருந்து சுமார் 484 மில்லியன் மைல் தூரத்தில் உள்ளது. 12 புவி ஆண்டுகளுக்கு ஒருமுறை சூரியனை முழுமையாகச் சுற்றி வருகிறது.

தற்போது, ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியில் பதிவான வியாழனின் படம் திரவம்போல் காட்சியளிக்கிறது.
எங்களது குரூப்பில் இணைந்து உலகில் இடம் பெறுகின்ற முக்கியச் செய்திகளை நம்பகத்தன்மையுடன் அறிந்து கொள்ளுங்கள்...

Post a Comment

0 Comments