Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

வடக்கின் பசுமைக்கு உதவும் Oriflame...


எமது எதிர்கால சந்ததியினருக்கும்,எங்கள் குடும்பத்தாருக்கும் அழகான பசுமையான எதிர்காலம் ஒன்றை எம்மால் உருவாக்க முடியும் என்பதை Oriflame நம்புகின்றது. இதன் காரணமாகவே இயற்கையின் நிலைப்புக்கு.அதனை பாதுகாப்பதற்கு Oriflame திடசங்கற்பம் பூண்டுள்ளது என Oriflame Sri Lanka தீவகப் பணிப்பாளர் லசந்தி பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

மில்லியன்கணக்காக உற்பத்திகளை தயாரித்து அறுபதுக்கும் மேற்பட்ட நாடுகளில் விநியோகத்தை மேற்கொள்ளும் சர்வதேச அழகுசார் வர்த்தக நாமமான Oriflame இயற்கையுடன் கொண்டுள்ள தாக்கமானது தவிர்க்க முடியாத ஒன்றாகும்.காலநிலை,காடுகள் மற்றும் ஆறுகளின் நிலைப்புக்காக எமது தயாரிப்புகளினால் ஏற்படும் தாக்கங்களை குறைப்பதற்காக அரும்பாடுபடும் Oriflame ஐ பிரதிநிதித்துவப்படுத்துவதிலும் அதன் உற்பத்திகளை விற்பனை செய்வதிலும் நாம் பெருமையடைகின்றோம். நீண்டகாலம் நிலைத்திருக்கும் அழகுசாதன உற்பத்திகளை உற்பத்தி செய்யும் எமது நிறுவனமானது முழுமையாக நிலைபேறான ஒரு நிறுவனமாக மாறவேண்டும் என்பதை கடுமையாக நம்புகின்றது.எமது இந்த பயணத்தில் நாம் இதனை அடைய கடுமையாக உழைக்கின்றோம். எமது நிலைபேறான மூலோபாயங்களின் பயனாக எமது சுவீடன் தயாரிப்புகள் சூழல் மீதான தாக்கத்தைக் குறைக்கக்கூடிய சாதகமான சாத்தியப்பாடுகளை கொண்டதாக அமைவதில் கூடிய கவனஞ் செலுத்துகின்றது என்று அவர் மேலும் தெரிவித்தார்.

எமது நிலைபேறான மூலோபாயங்கள் மூன்று முக்கிய விடயபரப்புகளை கொண்டிருக்கும். இயற்கையையும் அதன் மீது மக்களுக்கு உள்ள வேட்கைக்கும் மதிப்பளித்தல், இயற்கை எமக்கு கொடையாக அளித்துள்ள பாரிய உயிர்ப்பல்வகைமை, வளமான மண், நிலையான காலநிலை மற்றும் தூயவளி, நீர் ஆகியவற்றுக்கு மதிப்பளித்தல் போன்ற வாய்ப்புகளை எமது வர்த்தக நாம பிரதிநிதிகளுக்கு வழங்கியுள்ளோம் என்றார் அவர்.

2019ஆம் ஆண்டு தொடக்கம் Oriflame நிறுவனம் உலகளாவிய ரீதியில் இதுவரை 9 மில்லியனுக்கு மேற்பட்ட மரங்களை நட்டுள்ளதுடன், மீள்வனமாக்கற் திட்டம்,வனங்களைப் பாதுகாத்தல் போன்ற திட்டங்களை நடைமுறைப்படுத்தியுள்ளதோடு எமது நாளாந்த செயற்பாடுகளில் மீளப்பயன்படுத்தல், மீள்சுழற்சிற்கு உட்படுத்தக்கூடிய திரவியங்களை குறிப்பிடத்தக்க அளவில் பயன்படுத்தி வருகின்றது.

Oriflame நிறுவனம் பாரிய மரநடுகைத்திட்டம் ஒன்றினை வடக்கில் உள்ள பலாலியில் ஆரம்பிக்க நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.பலாலி பொலிஸ் நிலையம் மற்றும் சமூக ஊடக செயற்பாட்டாளர் நாலக்க சேனாதீர ஆகியோரினால் முன்னெடுக்கப்படும் இத்திட்டத்திற்கு இந்நிறுவனம் 1000 பலா மரக்கன்றுகளை வழங்கியுள்ளது. பலா மரத்திலுள்ள பல்வேறுபட்ட நன்மைகள் மற்றும் பயன்பாடுகளை கருத்திற்கொண்டே இத்திட்டத்திற்கு பலாமரம் தெரிவு செய்யப்பட்டது.

Post a Comment

0 Comments