Trending

6/recent/ticker-posts

Header Ads Widget

டெலிட் செய்த மெசேஜை திரும்பப் பெறும் ‘UNDO’ வசதியை அறிமுகப்படுத்துகிறது வாட்ஸ்அப்! (வீடியோ)

 


வாட்ஸ்அப் நிறுவனம் ‘UNDO DELETE MESSAGE' என்ற அம்சத்தை அறிமுகம் செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளது. இதன் மூலம் நாம் டெலிட் செய்த குறுஞ்செய்தியை சில நொடிகளில் திரும்ப பெற முடியும்.

ஒரு மெசேஜை “Delete For Everyone” வசதியை பயன்படுத்தி நீக்கிவிட்டால் அதை மீண்டும் அனுப்ப இயலாது. இந்த பிரச்சனையை சரிசெய்வதற்காக ‘UNDO DELETE MESSAGE' என்ற அம்சம் கொண்டுவரப்படவுள்ளது எனவும், தற்போது பீட்டா பயனாளர்களுக்கு மட்டும் தரப்பட்டுள்ள இந்த அம்சம் விரைவில் அனைவருக்கும் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய அம்சத்தில் ஒரு மெசேஜை டெலிட் செய்யும்போது, ஜிமெயிலில் காட்டப்படுவது போல “UNDO” வசதி நமது மொபைல் ஸ்கீரினில் தோன்றும். நாம் தவறுதலாக அந்த மெசேஜை டெலிட் செய்திருந்தால் இந்த ஆப்சனை பயன்படுத்தி அந்த மெசேஜை மீண்டும் பெற இயலும். அந்த ‘Undo delete’ அம்சம் எப்படி இருக்கும் என்பதை கீழே உள்ள படத்தில் பார்த்துக் கொள்ளலாம். இந்த ‘UNDO DELETE MESSAGE’ அம்சம் சில விநாடிகள் மட்டுமே இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Post a Comment

0 Comments

avatar
Star FM