Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

WHO இலங்கைக்கு மருத்துவ உதவி!


இலங்கை மக்களின் அவசர சுகாதார தேவைகளை பூர்த்தி செய்வதற்காக 04 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான அத்தியாவசிய மருத்துவ பொருட்கள் வழங்கப்படவுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.

உலக சுகாதார ஸ்தாபனத்தின் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைக்கான அத்தியாவசிய மருத்துவப் பொருட்களுக்கான கொள்வனவு நடவடிக்கைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், விநியோகிப்பதற்கான திகதிகள் மற்றும் பட்டியல்கள் உலக சுகாதார அமைப்பின் இலங்கை அலுவலகத்தினால் அறிவிக்கப்படும் எனவும் அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கொவிட்-19 தொற்றுநோய் காரணமாக இலங்கை எதிர்கொள்ளும் பொருளாதார அழுத்தத்தை உலக சுகாதார நிறுவனம் அங்கீகரிப்பதாகவும், உலகளாவிய உணவு மற்றும் எண்ணெய் விலை உயர்வு பாதிக்கப்படக்கூடிய சமூகத்திற்கு பெரும் சவாலாக இருப்பதாகவும், உலக சுகாதார அமைப்பு அந்த சவாலான காலகட்டத்தில் இலங்கைக்கு வசதிகளை வழங்குவதற்கு தயாராக உள்ளதாகவும் அவர் தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்..

எங்களது குரூப்பில் இணைந்து உலகில் இடம் பெறுகின்ற முக்கியச் செய்திகளை நம்பகத்தன்மையுடன் அறிந்து கொள்ளுங்கள்...

Post a Comment

0 Comments