
தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் அனுமதியின் கீழ், இணையத்தளம், நிலையான மற்றும் கையடக்கத் தொலைபேசி சேவைகளுக்கான கட்டணங்கள் இன்று(05) முதல் 20 சதவீதத்தினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
டொலரின் பெறுமதி அதிகரித்தமையினால் ஏற்பட்ட செயற்பாட்டு செலவுகளின் அதிகரிப்பினால், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தொலைபேசி நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
இதனிடையே, PAY TV எனப்படும் பணம் செலுத்தி பெறப்படும் தொலைக்காட்சி சேவைகளுக்கான கட்டணங்களும் 25 சதவீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
அனைத்து தொலைத்தொடர்பு சேவைகள் மற்றும் PAY TV சேவைகளுக்கான பெறுமதி சேர் வரி வீதம், இன்று(05) முதல் 12 முதல் 15 வீதம் வரை அதிகரிக்கப்பட்டுள்ளதாக தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.
0 Comments