Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

செப்டெம்பர் 26 மின்வெட்டு: 2 கட்டங்களில் 2 மணித்தியாலங்கள் 20 நிமிடங்கள்...!


இன்று (26) திங்கட்கிழமை மின்வெட்டு அமுல்படுத்துவது தொடர்பான அட்டவணையை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.

அந்த வகையில், பி.ப. 3.00 முதல் இரவு 10.00 மணிக்கு இடையில் 2 கட்டங்களில் 2 மணித்தியாலங்கள் 20 நிமிட நேர மின்வெட்டை அமுல்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, நாட்டை 20 வலயங்களாக (A,B,C,D,E,F,G,H,I,J,K,L | P,Q,R,S,T,U,V,W) பிரித்து ஒவ்வொரு வலயத்திலும் உள்ள பிரதேசங்களில்,

செப்டெம்பர் 26: 2 கட்டங்களில் 2 மணித்தியாலங்கள் 20 நிமிடங்கள்

ABCDEFGHIJKL | PQRSTUVW : 
 - பி.ப. 3.00 - பி.ப. 6.00 இடையில் 1 மணித்தியாலம்
 - பி.ப. 6.00 - பி.ப. 10.00 இடையில் 1 மணித்தியாலம் 20 நிமிடங்கள்

மின் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

போதிய எரிபொருள் இன்மை காரணமாக இலங்கை மின்சார சபையினால் விடுக்கப்பட்டுள்ள வேண்டுகோளுக்கிணங்க இவ்வாறு திட்டமிட்ட மின்வெட்டுக்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக, ஆணைக்குழு (PUCSL) தெரிவித்துள்ளது.

நன்றி...
தினகரன்

எங்களது குரூப்பில் இணைந்து உலகில் இடம் பெறுகின்ற முக்கியச் செய்திகளை நம்பகத்தன்மையுடன் அறிந்து கொள்ளுங்கள்...
https://chat.whatsapp.com/CdQrB2OOcuB80nQg6k4iDh

Post a Comment

0 Comments