Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

பெரும்போகத்திற்கு பயன்படுத்த 6 மாதங்களுக்கு கிளைபோசேட் இறக்குமதி....!


எதிர்வரும் 6 மாத காலத்திற்கு கிளைபோசேட் இறக்குமதிக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

நேற்றையதினம் (22) ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

விவசாய உற்பத்தி வீழ்ச்சி, உணவு விலை அதிகரிப்பை கருத்திற் கொண்டு, 2022/23 பெரும் போகத்தை பயனுள்ள வகையில் மேற்கொள்ள, அனைத்து விவசாய நடவடிக்கைகளுக்காகவும் அதனை பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

அரசால் மேற்கொள்ளப்பட்ட கிளைபோசேட் இறக்குமதி தடை மற்றும் மட்டுப்பாடுகளுக்காக மேற்கொள்ளபட்ட கொள்கைத் தீர்மானத்தால் அனைத்துவித விவசாய நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டுள்ளதுடன், விவசாய உற்பத்திகளிலும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

அது மட்டுமல்லாது, அத்தியாவசிய உணவுப் பொருட்களின் சந்தை விலையும் அதிகரித்துள்ளது.

இந்நிலைமையைக் கருத்தில் கொண்டு 2022/23 பெரும்போக செய்கையை மிகவும் பயனுள்ள வகையில் மேற்கொள்வதற்கு இயலுமாகும் வகையில் தேவைக்கேற்ப அனைத்து விவசாய நடவடிக்கைகளுக்காகவும் கிளைபோசேட் பயன்படுத்துவதற்கான வாய்ப்பு வழங்குவது பொருத்தமானதென பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, ஆறு (06) மாதங்களுக்கு விவசாய நடவடிக்கைகளுக்கு அவசியமான கிளைபோசேட் இறக்கமதி செய்வதற்கு இயலுமாகும் வகையில் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Post a Comment

0 Comments