Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

ஜனாதிபதி தலைமையில் மிக பிரம்மாண்டமாக இடம்பெற்ற ஐ.தே.க.வின் 76 ஆவது சம்மேளனம்...!ஐக்கிய தேசிய கட்சியின் 76 ஆவது சம்மேளனம் இன்று செவ்வாய்கிழமை மிக பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்டது. ஜனாதிபதியும் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவருமான ரணில் விக்ரமசிங்க தலைமையில் , பிரதமர் தினேஷ் குணவர்தன உள்ளிட்ட பல்வேறு கட்சி தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளின் பங்குபற்றலுடன் 'இணைந்து கட்டியெழுப்புவோம் ' என்ற தொனிப்பொருளில் கொழும்பிலுள்ள சுகாதாதாசா உள்ளக அரங்கில் சம்மேளன வைபவம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது .வடக்கு கிழக்கு உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளிலும் இருந்து வருகை தந்திருந்த நூற்றுக்கணக்கான மக்களால் சுகததாச உள்ளக அரங்கு நிரம்பியிந்ததை அவதானிக்க கூடியதாக இருந்தது. இவ்வாறு பெருந்திரளான மக்கள் பிரசன்னத்துடன் பிற்பகல் 4 மணியளவில் ஜனாதிபதியின் வருகையுடன் வைபவம் ஆரம்பமானது.

ஆரம்ப நிகழ்வாக ஐக்கிய தேசிய கட்சியின் ஸ்தாபகர் டீ.எஸ்.சேனநாயக உள்ளிட்ட தலைவர்களின் உருவ சிலைகளுக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது. அதற்கமைய ஐக்கிய தேசிய கட்சியின் ஸ்தாபகர் டீ.எஸ் சேனநாயக்காவின் உருவ சிலைக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் , டட்லி சேனாநாயக்கவின் உருவ சிலைக்கு பிரதி தலைவர் ருவன் விஜேவர்தனவும் , சேர் ஜோன் கொத்தலாவலவின் உருவ சிலைக்கு உப தலைவர் அகிலவிராஜ் காரியவசமும் , ஜே.ஆர்.ஜயவர்தனவின் உருவ சிலைக்கு பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டாரவும் , ரணசிங்க பிரேமதாசவின் உருவ சிலைக்கு தவிசாளர் வஜிர அபேவர்தனவினாலும் , டி.வி.விஜேதுங்கவின் உருவ சிலைக்கு தேசிய அமைப்பாளர் சாகல ரத்னாயக்கவினாலும் இவ்வாறு மலர் மாலை அணிவிக்கப்பட்டது.அதனைத் தொடர்ந்து அரங்கிலுள்ள அனைவரும் எழுந்து நிற்க தேசிய கீதம் இசைக்கப்பட்டது. நிகழ்வு ஆரம்பத்தின் போது சிங்கள மொழியிலிலும் , நிறைவில் தமிழ் மொழியிலும் தேசிய கீதம் இசைக்கப்பட்டமை விசேட அம்சமாகும். தொடர்ந்து ஐக்கிய தேசிய கட்சியின் பொது செயலாளர் பாலித ரங்கே பண்டாரவினால் வரவேட்புரை ஆற்றப்பட்டது .வரவேட்ப்புரையை தொடர்ந்து ஐக்கிய தேசிய கட்சியின் உப தலைவர் அகிகவிராஜ் காரியவசம் , பிரதி தலைவர் ருவான் விஜேவர்தன , தவிசாளர் வஜிர அபேவர்தன, அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ ஆகியோர் உரையாற்றினர். இவ் உரைகளுக்கு மத்தியில் ஜனநாயக இடதுசாரி முன்னணியின் சார்பில் பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணக்கார மற்றும் லங்கா சமசமாஜக் கட்சியின் சார்பில் பேராசிரியர் திஸ்ஸ விதாரன ஆகியோரின் வாழ்த்து செய்திகளும் வாசிக்கப்பட்டன. அத்தோடு பல்வேறு கலை நிகழ்வுகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

நிகழ்வின் இறுதியாகவே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் உரை அமைந்திருந்தது. உரையாற்றுவதற்காக ஜனாதிபதி எழுந்து மேடைக்கு சென்ற போது , அரங்கில் அமர்ந்திருந்த ஆதரவாளர்கள் எழுந்து நின்று தேசிய கொடிகளை அசைத்தவாறு வெற்றி கோஷம் எழுப்பினர். ஜனாதிபதி உரையாற்றிக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் அனைவரையும் இணைந்து செயற்பட அழைப்பு விடுத்த போது சகல ஆதரவாளர்களும் உரத்த குரலில் நாம் எப்போதும் ஐ.தே.க.வுடன் இருப்போம் என்று கோஷமெழுப்பினர்.28 ஆண்டுகளின் பின்னர் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ஜனாதிபதியாக பதவி வகிக்கும் நிலையில் இம்முறை சம்மேளனம் கொண்டாடப்பட்டமை விசேட அம்சமாக கருதப்படுகிறது. இந்த விசேட சம்மேளன கொண்டாட்ட வைபவத்தில் பிரதமர் தினேஷ் குணவர்தன , பொதுஜன பெரமுனாவின் பொது செயலாளர் சாகர காரியவசம் , ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவுப் ஹக்கீம் , அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாத் பதியுதீன் , ஈ . பீ. டீ. பீ. தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அமைச்சர்களான டிரான் அலஸ் , ஹரின் பெர்னாண்டோ, மனுஷ நாணயக்கார , கொழும்பு மாநகர மேயர் ரோஸி சேனநாயக , பாராளுமன்ற உறுப்பினர்களான அலி சப்ரி ரஹீம் , அறவிந்தகுமார் , ஏ.எல்.எம்.அத்தாவுல்லா உள்ளிட்ட பல முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது .

எங்களது குரூப்பில் இணைந்து உலகில் இடம் பெறுகின்ற முக்கியச் செய்திகளை நம்பகத்தன்மையுடன் அறிந்து கொள்ளுங்கள்...
https://chat.whatsapp.com/CdQrB2OOcuB80nQg6k4iDh

Post a Comment

0 Comments