Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Asia Cup 2022: டிரெஸ்ஸிங் ரூமில் பாகிஸ்தான் வீரர்களின் செயல்; வைரலாகும் வீடியோ



இந்திய அணிக்கு எதிராக கடைசி ஓவரின்போது பாகிஸ்தான் வீரர்கள் டிரெஸ்ஸிங் ரூமில் மிகவும் பதற்றத்துடன் போட்டியை கண்டு ரசித்த வீடியோ வெளியாகியுள்ளது.

துபாயில் இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான சூப்பர் 4 சுற்று ஆசிய கோப்பை போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்திய அணியை பாகிஸ்தான் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி, முதல் போட்டியில் தோல்வியை தழுவியதற்கு பழி தீர்த்துக் கொண்டது. இந்திய அணியின் பேட்டிங் சிறப்பாக இருந்தபோதும், பந்துவீச்சு மற்றும் பீல்டிங் சொதப்பலாக இருந்தது. கடைசி இரண்டு ஓவர்களில் அடுத்தடுத்து செய்த தவறுகள் போட்டியில் தோல்வியை தழுவுவதற்கு முக்கிய காரணமாக அமைந்தது.

அர்ஷ்தீப் சிங் கேட்ச் விட்டது, 19 ஓவரில் 19 ரன்கள் விளாசியது பாகிஸ்தான் அணிக்கு பெரும் வாய்ப்பாக அமைந்துவிட்டது. புவனேஷ்வர் குமார் சிறப்பாக பந்துவீசுவார் என எதிர்பார்த்து கேப்டன் ரோகித் சர்மா, அந்த ஓவரை அவருக்கு வழங்கினார். ஆனால், அவர் நினைத்தற்கு மாறாக கள நிலவரம் இருந்தது. புவனேஷ்வர் குமாரின் ஓவரை விளாசி 19 ரன்களை எடுத்த பாகிஸ்தான் அணி, வெற்றிக்கு மிக அருகில் சென்றது. கடைசி ஓவரில் வெறும் 7 ரன்கள் மட்டுமே எடுக்க வேண்டியிருந்தது.


இருப்பினும் இளம் வீரர் அர்ஷ்தீப் சிங் ஸ்லோ புல்டாஸ் மற்றும் யார்க்கர் வீசி நெருக்கடி கொடுத்தபோதும், வெற்றி இலக்கை எட்டி அசத்தியது பாகிஸ்தான் அணி. கடைசி ஓவர் மிகவும் பரபரப்பாக சென்றது. பெவிலியனில் அமர்ந்திருந்த பாகிஸ்தான் வீரர்கள், டிரெஸ்ஸிங் ரூமில் மிகவும் பதற்றத்துடன் ஒவ்வொரு பந்தையும் பார்த்துக் கொண்டிருந்தனர். 

இரண்டு ரன் மற்றும் ஒரு ரன்கள் களத்தில் இருந்த வீரர்கள் எடுத்தபோது கைகளை தட்டி உற்சாகப்படுத்தினர். கடைசியில் வெற்றி இலக்கு ரன்களை எடுத்தவுடன் கேப்டன் பாபர் அசாம் மற்றும் முகமது ரிஸ்வான், சதாப் கான் ஆகியோர் துள்ளிக்குதித்து வெற்றியைக் கொண்டாடினர். இந்த வீடியோவை பாகிஸ்தான் அணி, தங்களுடைய அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

Post a Comment

0 Comments