Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

கேகாலையில் தொடர் மழை அங்குருவெல்ல நகரம் வெள்ளதில் மூழ்கின...!



கடந்த சில தினங்களாக பெய்துவரும் தொடர் மழையால் நாட்டின் பல பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளதோடு நேற்று இரவு முதல் பெய்த அடைமழையால் கேகாலை மாவட்டத்தில் அவிசாவளை கேகாலை பிரதான வீதி வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.

அங்குருவெல்ல, ருவன்வெல்ல நகரங்களும் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ளது.

அங்குருவெள்ள நகரம் முற்றாக வெள்ளத்தில் மூழ்கியதுடன் வியாபார நிலையங்கள் மற்றும் வீடுகளுக்கு நீர் புகுந்து இழப்புக்களை ஏற்படுத்தியுள்ளது.

அங்குருவெள்ள குருகொடை ஆறு மற்றும் ரிடி கஹ ஆறு என்பவற்றின் நீர்மட்டம் அதிகரித்து வெள்ளம் ஏற்பட்டதால் இந்நிலை உருவாகியுள்ளது.



இதனால் இதன் அண்டிய கன்னந்தொட்டை, அங்குருவெல்ல, ருவன்வெல்ல பிரதேச மக்கள் பாதிப்புக்களை சந்தித்துள்ளனர். பல வீடுகளும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.



அத்தோடு தேசிய கட்டிட ஆய்வு மையத்தால் எட்டியாந்தோட்டை, புளத்கோபிட்டிய, கேகாலை, கலிகமுவ, மாவனல்லை, ரம்புக்கன மற்றும் வரக்காபொல பிரதேச செயலகங்களுக்கு உட்பட்ட பகுதிகளுக்கு மண் சரிவு அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.



அதேநேரம் களனி ஆறும் பெருக்கெடுத்து இருப்பதால் அதன் அண்டிய பிரதேச மக்களும் அவதானத்துடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.




எங்களது குரூப்பில் இணைந்து உலகில் இடம் பெறுகின்ற முக்கியச் செய்திகளை நம்பகத்தன்மையுடன் அறிந்து கொள்ளுங்கள்...
https://chat.whatsapp.com/CdQrB2OOcuB80nQg6k4iDh

Post a Comment

0 Comments