Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

இலங்கை வலைப்பந்து அணி இந்தியாவிடம் இலகு வெற்றி...!



சிங்கப்பூரில் ஆரம்பமான ஆசிய வலைப்பந்தாட்ட சம்பியன்ஷிப் தொடரில் இலங்கை அணி கடந்த சனிக்கிழமை நடந்த தனது முதல் போட்டியில் இந்தியாவை 102–14 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றியீட்டியது.

மிகவும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடைபெற்ற இந்தப்போட்டியில் இலங்கை அணி ஆரம்பம் முதல் தங்களுடைய ஆதிக்கத்தை வெளிப்படுத்தியது.

முதல் கால்பகுதியில் இலங்கை அணி 34 புள்ளிகளை பெற்றுக்கொண்டதுடன், இந்தியா வெறும் 2 புள்ளிகளை மாத்திரமே பெற்றுக்கொண்டது. தொடர்ந்து ஆரம்பித்த அடுத்தடுத்த கால்பகுதிகளில் இலங்கை அணி அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

முன்னணி வீராங்கனை தர்ஜினி சிவலிங்கம் தனக்கு கிடைத்த வாய்ப்பில் 75 முயற்சிகளில் 72 புள்ளிகளை அதிகபட்சமாக பெற்றுக்கொண்டார்.

முதல் போட்டியில் வெற்றிபெற்றிருக்கும் இலங்கை அணி தங்களுடைய அடுத்த போட்டியில் பிலிப்பைன்ஸ் அணியை இன்று (05) எதிர்கொள்ளவுள்ளது.

Post a Comment

0 Comments