Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

அரசாங்கம் அனைத்து சமூகங்களினதும் உரிமைகள் பாதுகாக்கப்படுவதை உறுதிசெய்ய முயல்கின்றது - வெளிவிவகார அமைச்சர்...!


அனைத்து சமூகங்களினதும் உரிமைகள் பாதுகாக்கப்படும் சமூகத்தை கட்டியெழுப்புவதற்கான முயற்சியில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

நியுயோக்கில் ஐக்கியநாடுகள் பொதுச்சபையின் 77வது அமர்வின் ஒரு பகுதியாக இடம்பெற்ற சிறுபான்மையினத்தவர் உரிமை குறித்த உயர் மட்ட கூட்டத்தில் உரையாற்றும்போது இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.

சமூகங்கள் மத்தியில் நம்பிக்கை மற்றும் நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவதற்கு தற்போதைய அரசங்கம் முன்னுரிமை வழங்கியுள்ளது என தெரிவித்துள்ள வெளிவிவகார அமைச்சர் சமூகங்களிற்கு இடையிலான ஐக்கியம் மற்றும் புரிந்துணர்வை கட்டியெழுப்புவதற்காக சமூக மற்றும் பாராம்பரிய வழமைகளை பின்பற்றி பல மட்;டங்களில் தொடர்ச்சியான பேச்சுவார்த்தைகள் இடம்பெறுகின்றன எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மதவெறுப்பு மற்றும் அலட்சியம் என்ற விடயத்தில் பூஜ்ஜிய சகிப்புத்தன்மையை அரசாங்கம் பின்பற்றுகின்றது எனவும் அவர்தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments