Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

இலங்கையின் நிலைமை பங்களாதேசிற்கு ஏற்படாது - ஷேக் ஹசீனா உறுதி...!



இலங்கை போன்றதொரு பொருளாதார நெருக்கடியை தனது நாடு எதிர்கொள்ளாது என பங்களாதேஸ் பிரதமர் ஷேக் ஹசீனா தெரிவித்துள்ளார்.

அந்நியசெலவாணி கையிருப்பு குறைவடைவதாலும் இறக்குமதி செலவுகள் அதிகரிப்பதாலும் பங்களாதேஷ் சர்வதேச நிதியமைப்புகளின் கடன் உதவியை நாடியுள்ள போதிலும் தனது நாடு இலங்கை போன்றதொரு பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளாது என ஷேக் ஹசீனா தெரிவித்துள்ளார்.

இந்தியாவிற்கான விஜயத்திற்கு முன்னதாக ஏஎன்ஐக்கு வழங்கியுள்ள செவ்வியில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

கொவிட்பெருந்தொற்று உக்ரைன் யுத்தம் போன்றவற்றின் தாக்கத்திற்கு மத்தியிலும் பங்களாதேசின் பொருளாதாரம் வலுவானதாக காணப்படுகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.

பங்களாதேசின் 416 பில்லியன் டொலர் பொருளாதாரம் உலகின் மிகவும் வேகமாக வளர்ச்சியடைந்து வரும் பொருளாதாரமாக காணப்பட்டது எனினும் அந்நிய செலாவணி கையிருப்பு குறைவடைந்துள்ளதாலும் ஏற்றுமதி செலவீனங்கள் அதிகரித்துள்ளதாலும் சர்வதேச நாணயநிதியம் போன்ற சர்வதேச நிதியமைப்புகளிடமிருந்து நிதி உதவியை பெறவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

பங்களாதேஸ் எப்போதும் உரிய நேரத்தில் கடன்களை திருப்பி செலுத்திவிடும்,இலங்கையுடன் ஒப்பிடும்போது எங்கள் கடன்வீதம் மிகவும் குறைவு எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

சிலர் பங்களாதேஸ் இலங்கையை போன்ற நிலையை எதிர்கொள்ளக்கூடும் என தெரிவித்துள்ளனர் ஆனால் அது இடம்பெறாது என்ற உத்தரவாதத்தினை என்னால் வழங்க முடியும் என பங்களாதேஸ் பிரதமர் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments