Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

வாழைச்சேனை மாவடிச்சேனையைச் சேர்ந்தவர் மீன்பிடிக்கச் சென்று கடலில் தவறி வீழ்ந்து பலி!

 

ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர் ஒருவர் க டலில் தவறி வீழ்ந்து மூழ்கிய சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வாழைச்சேனை துறைமுகத்திலிருந்து 17 ஆம் திகதி இயந்திர படகில் மூன்று மீனவர்கள் மீன் பிடிக்கச் சென்றுள்ளனர்.

இவ்வாறு சென்ற மூன்று மீனவர்களில் ஒருவர் நேற்று (18) கடலில் தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளதாக அவருடன் சென்ற இரண்டு மீனவர்களும் பொலிஸாரிடம் வாக்குமூலம் வழங்கியுள்ளனர்.

உயிரிழந்தவர் மாவடிச்சேனை அஹமட் ஹிராஸ் வீதியைச் சேர்ந்த 48 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தந்தையான இப்றா லெப்பை கலீல் என்பவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

உடல் பிரேத பரிசோதனைக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Post a Comment

0 Comments