Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள அறிவுரை…!


வெளிநாட்டு வேலைவாய்ப்பை பெற்று தருவதாக கூறி அதிகம் பணம் வசூலிக்கும் தரப்பினர்களிடம் ஏமாற வேண்டாம். மேலும் அவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடும். 

தரப்பினர்களுக்கு எதிராக சர்வதேச சமூகத்தின் உதவியுடன் அந்தஸ்து பாராது தண்டனை வழங்கப்படும் என்று தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.



இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், வெளிநாட்டுக்கு தொழில் நிமித்தம் செல்வதற்கு ஆயத்தமாக இருக்கும் தரப்பினர் இஸ்ரேல், ஜப்பான் மற்றும் கொரியா போன்ற நாடுகளுக்கு செல்வதற்கு முயற்சி செய்யுங்கள். அவ்வாறு இல்லாமல் வெளிநாடு அனுப்புவதாக கூறி பணம் வசூலிக்கும் தரகர்களிடம் ஏமாற வேண்டாம்.

குறித்த தரகர்களிடம் பணத்தை செலுத்தி அதன் பின்னர் ஏமாற்றமடைந்து பொலிஸாரிடம் முறைப்பாடு செய்வதன் மூலம் அவர்களிடமிருந்து அந்த பணத்தை உடனடியாக பெற்றுக்கொள்ள முடியாது. இது போன்ற வஞ்சகர்களிடம் ஏமாற வேண்டாம் என்று பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கிறேன்.

மேலும் ஜப்பான், கொரியா போன்ற நாடுகளுக்கு தொழில் வாய்ப்புக்காக செல்லும் ஒருவர் கட்டாயம் நடைமுறையில் உள்ள மொழிகள் மற்றும் அங்கு செல்வதற்கான முழுமையான அனைத்து தகமைகளும் கொண்டிருக்க வேண்டும்.
எனவே வெளிநாட்டு வேலைவாய்ப்பை பெற்று தருவதாக கூறி அதிகம் பணம் வசூலிக்கும் தரப்பினர்களிடம் ஏமாற வேண்டாம்

இவ்வாறு செயல்படும் தரப்பினர் இருப்பின் கட்டாயம் எங்களுக்கு தெரியப்படுத்துங்கள். அது தொடர்பில் மேலதிக சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மேலும் பதிவு செய்யப்பட்ட அமைப்பாக இருந்தாலும் அளவுக்கு அதிகமாக பணம் கோருபவராக இருந்தால் தெரியப்படுத்துங்கள் என்றார்.

Post a Comment

0 Comments