Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

வெளிநாட்டில் பணிபுரிந்து நாடு திரும்பிய மனைவியின் கழுத்தை வெட்டிக் கொலை செய்த கணவர்: தம்புள்ளையில் சம்பவம்…!



தம்புள்ளை பிரதேசத்தில் கணவன் மற்றும் மனைவிக்கு இடையில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக மனைவி கழுத்து துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் நேற்று (04) இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

தம்புள்ள பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் கொட்டாவெல பிரதேசத்தில் கடந்த மாதம் 31 ஆம் திகதி வெளிநாடு ஒன்றில் பணிபுரிந்து மீண்டும் நாட்டுக்கு திரும்பிய மனைவியின் கழுத்தை வெட்டியே கணவர் கொலை செய்துள்ளமை விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

கணவன், மனைவிக்கு இடையில் இருந்த நீண்டகாலமாக காணப்பட்ட முறுகல் நிலை கொலைக்கு காரணம் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளார்கள்.

இவ்வாறு உயிரிழந்தவர் 42 வயதுடைய கொட்டவெல, தம்புள்ள பிரதேசத்தைச் சேர்ந்தவராவார். சந்தேக நபர் தப்பிச் சென்றுள்ளதாகவும் சம்பவம் தொடர்பில் தம்புள்ள பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளார்கள்.

Post a Comment

0 Comments