Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

’மாமன்னன்' படக்குழுவினருடன் தனது பிறந்தநாளை கொண்டாடிய ”நடிகர் வடிவேலு”


நடிகர் 'வைகைபுயல்’ வடிவேலு தனது 62வது பிறந்தநாளை ’மாமன்னன்’ படக்குழுவினருடன் கொண்டாடியுள்ளார்.

உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவீஸ் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் படம் ‘மாமன்னன்’. இப்படத்தின் நாயகியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கின்றார். நடிகர் வடிவேலு மற்றும் பஹத் பாசில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இசைபுயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார்.



பல வருடங்களாக படங்களில் நடிக்காமல் இருந்த நடிகர் வடிவேலு கம்பேக் கொடுக்கும் விதமாக படம் முழுக்க வரும் கதாபாத்திரத்தில் மாமன்னன் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.



இந்நிலையில் தற்போது சேலத்தில் நடைபெற்று வரும் இப்படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொண்ட நடிகர் வடிவேலு, தனது பிறந்தநாளை இயக்குனர் மாரி செல்வராஜ், நடிகர்கள் உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ், பஹத் பாசில், ரெட் ஜெயன்ட் மூவீஸ் இணை தயாரிப்பாளர் M.செண்பகமூர்த்தி, லைகா புரொடக்‌ஷன்ஸ் தலைமை அதிகாரி GKM தமிழ் குமரன் மற்றும் மாமன்னன் படக்குழுவினருடன் இணைந்து மகிழ்ச்சியுடன் கேக் வெட்டி கொண்டாடினார்.

மேலும் படக்குழுவினர் அனைவரும் தங்களது வாழ்த்துக்களை நடிகர் வடிவேலுவிற்கு மகிழ்ச்சியாக தெரிவித்தனர்.

எங்களது குரூப்பில் இணைந்து உலகில் இடம் பெறுகின்ற முக்கியச் செய்திகளை நம்பகத்தன்மையுடன் அறிந்து கொள்ளுங்கள்...
https://chat.whatsapp.com/CdQrB2OOcuB80nQg6k4iDh

Post a Comment

0 Comments